Saturday, October 11, 2014

பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் புலிகளின் சார்பில் செயற்பட்டு வருவதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது!

Saturday, October 11, 2014
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் செயற்பட்டு வருவதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. பிரித்தானிய பிரதமர் கமரூன் புலம்பெயர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒப்பந்தங்களை ஏற்றுச் செயற்பட்டு வருவதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
 
புலம்பெயர் தமிழர்களடன் கமரூன் தொடர்புகளைப் பேணுவது வெளிப்படையானது என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டின் போது இந்த தொடர்புகள் அம்பலமாகியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
மனித உரிமை விபரங்களைக் காரணம் காட்டி இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய நடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பிரித்தானிய பிரதமர் பங்கேற்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் புலம்பெயர் தமிழ் சமூகத்துடன் இரகசிய சந்திப்புக்களை நடாத்த முயற்சித்துள்ளதாகவும், ஊடகங்களில் அந்த தகவல் வெளியாகியிருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் ரணில் விக்ரமசிங்கவை இரகசியமாக சந்திப்ப விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment