Tuesday, October 14, 2014
ஹாங்காங்::ஹாங்காங்கில் முழுமையான ஜனநாயக முறையை நடைமுறைப்படுத்தக்கோரி மாணவர்கள்
உள்பட பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் இதற்கு
செவிகொடுக்காத சீனாவும், ஹாங்காங் நிர்வாகமும், இந்த போராட்டம் சட்ட
விரோதமானது என அறிவித்து உள்ளன.
எனினும் ஹாங்காங்கின் மையப்பகுதியில் உள்ள பல்வேறு சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்தநிலையில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் பகுதிகளுக்கு நேற்று அடையாளம் தெரியாத நூற்றுக்கணக்கானோர் திடீரென திரண்டு வந்தனர். தங்கள் முகத்தை மூடியிருந்த அவர்கள், போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். பின்னர் அவர்கள் சாலைகளில் ஏற்படுத்தியிருந்த தடுப்புகளை வலுக்கட்டாயமாக அகற்றினர்.
மாணவர்களின் போராட்டத்தால் பாதிக்கப்பட்டிருந்த கார் மற்றும் லாரி டிரைவர்களும், போராட்ட எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கினர். இதனால் அவர்களிடையே மோதல் ஏற்பட்டது. அங்கே பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீசார் இந்த மோதலை தடுத்து நிறுத்தினர். ஹாங்காங்கில் போராட்டக்காரர்களுக்கு எதிராக, எதிர் போராட்டம் தொடங்கியுள்ளதால் அங்கு பதற்றம் ஏற்பட்டு உள்ளது.

No comments:
Post a Comment