Tuesday, October 7, 2014

ஜெ., சிறைவாசம் தொடர்கிறது - ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணை: ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடையாது- கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி!!

Tuesday, October 07, 2014
பெங்களூர்::அ.தி.மு.,க., தொண்டர்கள் சோகம்
மதுரவாயல் அருகே கர்நாடக வாகனங்கள் அடித்து நொறுக்கி அதிமுவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
சுப்ரீம் கோர்ட்டை அணுகுவோம்: ராம்ஜெத்மலானி
சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
 
ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபணை இல்லை என்று அரசு வழக்கறிஞர் கூறியும் ஜாமீன் கிடைக்கவில்லை
 
ஜெ., சிறைவாசம் தொடர்கிறது
 
ஜெயலலிதா ஜாமின் மனு நிராகரிப்பு! ஊழல் மனித உரிமைக்கு எதிரானது எனக் கூறி ஜாமின் மனுவை நிராகரிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்
ஜாமின் மனுவை நிராகரித்தார் நீதிபதி திடீர் அதிரடி மாற்றம்
 
ஜெயலலிதாவுக்கு தரப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை- நீதிபதி
 
தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிப்பு.
 
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஜெ.,வுக்கு இன்று மதியம் ஜாமின் கிடைத்தததாக தகவல் பரவியது. ஆனால் நீதிபதி தனது உத்தரவில் திடீர் அதிரடியாக ஜெ., உள்ளிட்ட 4 பேருக்கும் ஜாமின் வழங்க முடியாது என தனது உத்தரவை பிறப்பித்தார்.

இன்று பரபரப்பான விவாதம் காலை முதல் நடந்து கொண்டிருந்தது. காலையில் அரசு தரப்பு வழக்கறிஞர் ஜெ.,வுக்கு நிபந்தனை ஜாமின் வழங்குவதில் எனக்கு ஆட்சேபம் இல்லை என தெரிவித்தார். இதனையடுத்து அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டதாக அனைத்து வக்கீல்களும், கோர்ட்டுக்கு வெளியே வந்து கூறினர். இதனையடுத்து இந்த செய்தி அனைத்து பகுதிகளுக்கும் பரவியது. பல மீடியாக்களிலும் ஜாமின் வழங்கப்பட்டதாக செய்தி வெளியிட்டது. அ,தி.மு.,கவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். பல இடங்களில் இனிப்பு வழங்கப்பட்டது.

தொடர்ந்து சில நிமிடங்களில் நீதிபதி சந்திரசேகராவின் அதிரடி உத்தரவு பிறப்பித்தார், இந்த உத்தரவில் அரசு தரப்பு வழக்கறிஞர் நோ அப்ஜக்ட் செய்தாலும் , குற்றவாளிகளை ஜாமினில் விடுதலை செய்ய கோர்ட்டுக்கு விருப்பமில்லை. அரசு வக்கீல் நிலை ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. ஜெ., உள்ளிட்ட 4 பேரும் பெரும் ஊழல் குற்றம் புரிந்துள்ளனர். லாலுகூட பல நாட்கள் சிறையில் இருந்து தான் ஜாமின் வழங்கப்பட்டது. மனித உரிமைகளுக்கு ஊழல் எதிரானது. சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின்படி இவருக்கு ஜாமின் வழங்க முடியாது. இவர்களுக்கு கருணை காட்ட முடியாது. இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.
 
நீதிபதி சந்திரசேகரா தனது உத்தரவில் கூறியிருப்பதாவது:-
கைதிகளை வெளியிட்டால் சாட்சிகளை கலைத்து விடுவார்கள் என்று முதலில் கூறிய அரசு வக்கீல் திடீரென தனது நிலையை மாற்றிக்கொண்டது வேடிக்கையாக உள்ளது. இதில் இருந்தே இது உள்நோக்கம் கொண்டது என்பது தெளிவாகிறது. இந்த வழக்கில் பெரும் முறைகேடு நடந்துள்ளது. நீதிபதி குன்ஹா தெளிவான தீர்ப்பளித்துள்ளார். ஊழல் என்பது பொருளாதாரத்தை முடக்கும் குற்றம் ஆகும். இவர்கள் சாதாரண குற்றவாளிகள் அல்ல. இது போன்ற குற்றவாளிகள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் பல வழிமுறைகளை தெரிவித்துள்ளது. லாலு பிரசாத் பல மாதங்கள் சிறையில் இருந்த பின்னரே சுப்ரீம் கோர்ட்டால் விடுவிக்கப்பட்டார். இதனால் இவர்களை ஜாமினில் விடுவிக்க முடியாது . இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment