Friday, October 3, 2014

மேற்கத்திய நாடுகளின் முட்டாள் தனமான தடைகளால் ரஷ்யாவின் வளர்ச்சி பாதிக்காது: அதிபர் புடின் பேச்சு!

Friday, October 03, 2014
மாஸ்கோ::மேற்கத்திய நாடுகளின் முட்டாள்தனமான பொருளாதார தடைகளால், ரஷ்யாவின் பொருளாதார வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியாது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பேசினார். உக்ரைனில் கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருவதாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டின. மேலும், உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் கொண்டு வந்தன.
 
இதற்கு பதிலடியாக, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் இருந்து ரஷ்யாவில் இறக்குமதி செய்யப்படும் உணவு பொருட்கள் மற்றும் காய்கறிகளுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தடை விதித்தார்.மேற்கத்திய நாடுகளின் தடைகளால், ரஷ்யாவின் பொருளாதாரம் நலிவடைந்து வருவதாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டது. இதைத் தடுக்கும் விதமாக, ரஷ்ய மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இடையே நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அதிபர் விளாடிமிர் புதின் பேசினார்.
 
ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடைகள், உலக பொருளாதாரத்தின் அடிப்படை கோட்பாடுகளை மீறும் வகையில் உள்ளன. இதை முறியடிக்கும் விதமாக, ரஷ்யாவின் பொருளாதாரத்தை பல்வேறு வகையில் வலுவாக்கி வருகிறோம். அவர்களின் தடைகளை நாம் புன்னகையுடன் ஏற்று அவற்றை முறியடித்து வருகிறோம். மேற்கத்திய நாடுகளின் முட்டாள்தனமான தடைகள், நமது பொருளாதார வளர்ச்சியை, வணிக போட்டியை, வேலைதிறனை பாதிக்காது. ரஷ்யாவுக்கு பொருளாதார தடைகள் விதித்ததன் மூலம், உலக பொருளாதாரத்தை சிதைத்து விட்டனர். இவ்வாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பேசினார். அவரது பேச்சு, முதலீட்டாளர்கள் இடையே பலத்த வரவேற்பை பெற்றது.

No comments:

Post a Comment