Thursday, October 2, 2014

மட்டக்களப்பு மாவட்டத்தில் சில பகுதிகளில் மீள்குடியேறுவதற்கு தமிழ் மக்கள் முன்வருவதில்லை: விநாயகமூர்த்தி முரளிதரன்!

Thursday, October 02, 2014
இலங்கை::மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள்குடியேற்றம் முழுமையாக்கப்பட்டுள்ளது. ஆனால் சில பகுதிகளில் மீள்குடியேறுவதற்கு தமிழ் மக்கள் முன்வருவதில்லை.அவ்வாறான பகுதிகளில் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவதற்கு மக்களை அனைவரும் தூண்டவேண்டும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
 
நேற்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் மீள்குடியேற்றம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சில பகுதிகளில் இதுவரையில் மீள்குடியேற்றம் பூர்த்திசெய்யப்படவில்லையெனவும் அவற்றினை பூர்த்திசெய்ய நடவடிக்கையெடுக்கப்படவேண்டும் எனவும் மீள்குடியேறியவர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படவேண்டும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனால் இங்கு தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த மீள்குடியேற்ற பிரதியமைச்சர்:-

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பணிகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன.படைமுகாம்கள் இருந்த பகுதிகளில் மட்டும் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளது.அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

எதிர்வரும் 03ஆம் திகதி மீள்குடியேற்ற அமைச்சர் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வருகைதரவுள்ளார்.அதன்போது படைமுகாம்கள் உள்ள பகுதிகளில் மக்கள் குடியேற்றம் செய்யப்படவுள்ளனர்.அதற்காக தற்காலிக கொட்டகைகள் வழங்கப்படவுள்ளன.

மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களின் அடிப்படை பிரச்சினைகள் எனது கவனத்துக்கு வரும்போது தீர்த்துவைக்கப்படுகின்றன.கவனத்துக்கு வராதபோது அதனைச்செய்யமுடியாதுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தினைப்பொறுத்தவரையில் மீள்குடியேற்றம் பூர்த்திசெய்யப்பட்டுள்ளது.ஆனால் சில பகுதிகளில் மக்கள் குடியேறுவதற்கு ஆர்வம் காட்டுவதில்லை.சில பகுதிகளில் அவர்கள் இருந்துவிட்டு சென்றுவிடுகின்றனர்.அவர்கள் தங்களது பகுதிகளில் தொடர்ந்து வசிக்கும்போதே அவர்களின் அடிப்படை வசதிகளை பூர்த்திசெய்யமுடியும்.

அவர்களை சொந்த இடங்களில் சென்று இருக்குமாறு அனைவரும் அவர்களை தூண்டவேண்டும்.அவர்களுக்கு எழும் பிரச்சினைகளை எனது கவனத்துக்கு கொண்டுவந்தால் அவற்றினை தீர்த்துவைப்பதற்கு நான் தயாராகவுள்ளேன்.

மேலும் ஏதாவது பிரச்சினைகள் இருக்குமானால் எதிர்வரும் 03ஆம் திகதி மீள்குடியேற்ற பிரதியமைச்சர் வருகைதரவுள்ளார்.அந்தவேளையில் நீங்கள் அவற்றினை சுட்டிக்காட்டமுடியும்.அதற்கான ஏற்பாடுகள் செய்துதரப்படும் என தெரிவித்தார்.
 

No comments:

Post a Comment