Saturday, October 25, 2014

கனடாவில் தடை செய்யப்பட்ட இயங்கங்களான புலிகளுடனோ அல்லது உலகத் தமிழர் இயக்கத்துடனோ தொடர்பைப் பேணுவது தண்டனைக்குரிய குற்றம்: தீபக் ஒபராய்!

Saturday, October 25, 2014
கனடாவில் ஒரே வாரத்தில், இரண்டு படை வீரர்கள் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளது, பயங்கரவாதம் பற்றிய கனடாவின் பார்வையை இறுக்கமடையச் செய்துள்ளது. இதனால், கனடாவில் தடை செய்யப்பட்ட இயங்கங்களான புலிகளுடனோ அல்லது உலகத் தமிழர் இயக்கத்துடனோ தொடர்பைப் பேணுவது தண்டனைக்குரிய குற்றம் என கனடிய வெளிவிவகார அமைச்சின் செயலரும், கனடியப் பாதுகாப்பு கட்டமைப்பின் உறுப்பினருமான தீபக் ஒபராய் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து செய்தியாளர்களுக்கு அவர் கருத்து தெரிவிக்கையில், கனடாவில்  புலிகள் அமைப்பும் உலகத் தமிழர் இயக்கமும் பயங்கரவாத இயக்கங்களாகத் தடை செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றுடன் தொடர்பு கொள்வது தண்டனைக்குரிய குற்றம். யாராவது தமது அறிவுக் கெட்டிய வகையில் தடை செய்யப்பட்ட இந்த அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணினால் அவர்கள் கனடியக் குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள். அவ்வாறு யாராவது விடுதலைப் புலிகளுடனோ அல்லது உலகத்தமிழர் இயக்கத்துடனோ தொடர்புடைய செயற்பாடுகளைக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஒருவருக்குத் தெரிந்தால் அவர் அதனை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சிற்கு அறிவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு கனடிய பொதுமக்கள் பாதுகாப்பமைச்சின் இணையத் தள விளக்கங்களையும் [http://www.publicsafety.gc.ca/cnt/ntnl-scrt/cntr-trrrsm/lstd-ntts/index-eng.aspx ] கருத்திலெடுக்க வேண்டுமெனவும், ஒருவர் தனது சுய அறிவுக்கு எட்டிய வகையில் இந்த அமைப்புக்களின் எந்தவொரு செயற்பாடுகளிலும் நேரடியாகவோ மறைமுகமாவோ ஈடுபடுகிறார் அல்லது அவ்வாறானதொரு நடவடிக்கைக்குப் மறைமுகமாக ஒத்தாசை புரிகிறார் “knowingly participate in or contribute to, directly or indirectly, any activity of a terrorist group.” என்பது கூட குற்றமாகக் கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பயங்கரவாத அமைப்புக்களின் நடவடிக்கைகளில் பங்கேற்றார்கள், துணை போனார்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் ஒருவர் ஆகக்கூடியது 14 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படுவதுடன், தண்டனையின் பின்னான காலத்தில் கண்காணிப்புக் உட்படுத்தப்படும் நிலை தொடரலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment