Saturday, October 11, 2014

இந்திய - இலங்கையின் 2வது வருடாந்த பாதுகாப்பு கலந்துரையாடலில் கலந்து கொண்ட இந்திய பாதுகாப்புச் செயலாளர் திரு.ஸ்ரீ ஆர்.கே.மாதுர்!

 Saturday, October 11, 2014
இந்திய - இலங்கையின் 2வது வருடாந்த பாதுகாப்பு கலந்துரையாடலில் கலந்து கொண்ட இந்திய பாதுகாப்புச் செயலாளர் திரு.ஸ்ரீ ஆர்.கே.மாதுர் அவர்களும் பிரதிநிதிகள் குழுவினரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ அவர்களையும் உயர் அதிகாரிகளை பாதுகாப்பு அமைச்சில் வைத்து சந்தித்தனர்.
இந்திய பாதுகாப்புச் செயலாளர் திரு.ஸ்ரீ ஆர்.கே.மாதுர் அவர்களும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ அவர்களும் இப்பாதுகாப்பு கலந்துரையாடலை தலைமை தாங்கியதுடன் பிரதிநிதிகள், பாதுகாப்பு அமைசின் அதிகாரிகள், வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள், மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இக்கலந்துரையாடலில் இரு நாடுகளினதும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டதுடன் பிராந்திய பாதுகாப்பு மற்றும் கடலோர பாதுகாப்பு தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

No comments:

Post a Comment