Monday, September 29, 2014

சொத்து குவிப்பு வழக்கில் ஜெ.வுக்கு தண்டனை: சிறை அமைத்து நிர்வாகி உண்ணாவிரதம்!!

Monday, September 29, 2014
சென்னை::சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து குமரி மாவட்ட அதிமுக நிர்வாகி சிறை அமைத்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் நேற்று முன் தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைதண்டனை வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். குமரி மாவட்டம் காக்கமூர் பகுதியை சேர்ந்தவர் கணபதி (44). சுசீந்திரம் பேரூர் ஜெயலலிதா பேரவை செயலாளராக உள்ளார்.

இவர், நேற்று மதியம் 2 மணியளவில் சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயில் அருகில் வந்தார். பின்னர் அவர் கோயிலில் பிரதான நுழைவு வாயில் அருகே இரும்பு கம்பியால் சிறை போன்ற அமைப்பை ஏற்படுத்தினார். அதற்குள் கட்டில் ஒன்றையும் கொண்டு சென்றார். ஜெயலலிதா விடுதலை ஆகும் வரை, தண்ணீர் மட்டுமே குடித்து, உண்ணாவிரத போராட்டம் நடத்த போகிறேன் என கூறி விட்டு, உள்ளே அமர்ந்து கொண்டார். அவரின் போராட்டம் குறித்து அறிந்த அதிமுகவினர் அங்கு திரண்டனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

மொட்டை போட்டனர்சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து அரியலூர் மாவட்ட அதிமுக சார்பில் நேற்று மொட்டையடிக்கும் போராட்டம்  பஸ் நிலையம் அருகிலுள்ள எம்ஜிஆர் சிலை அருகில் நடந்தது. அதிமுகவை சேர்ந்த நகராட்சி கவுன்சிலர்கள் சிவஞானம், கருணாநிதி உள்ளிட்ட 14 பேர் மொட்டை அடித்து எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.

2 பெண்கள் சாவுதிண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே முத்துலாபுரத்தை சேர்ந்தவர் பாலம்மாள் (52). இவர், ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்ட செய்தியை டிவியில் பார்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அதிர்ச்சியில் மயங்கி விழுந்து பலியானார். வத்தலக்குண்டு அருகே மேட்டூரை சேர்ந்த ஆறுமுகம் மனைவி பெரியம்மாள் (51). இவரிடம், உறவினர் செல்லமுத்து ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்ட சம்பவத்தை கூறினார். அதிர்ச்சியில் மயங்கி விழுந்த பெரியம்மாள் அதே இடத்தில் உயிர் இழந்தார்.

No comments:

Post a Comment