Tuesday, September 16, 2014

தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக கல்பாக்கம் அணுமின்நிலையத்திற்கு கூடுதல் பாதுகாப்பு!

Tuesday, September 16, 201
சென்னை::தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக கல்பாக்கம் அணுமின்நிலையத்திற்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை சாலிகிராமம் பகுதியில் இலங்கையை சேர்ந்த புலிகளின் உறுப்பினரான பாகிஸ்தான் உளவாளி அருள்செல்வராசன் (வயது 29) தமிழகபோலீசாரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மடிக்கணினியை போலீசார் ஆய்வு செய்ததில் தமிழகத்தில் பல கட்டங்களாக தாக்குதல் நடத்தும் திட்டங்கள் தெரிய வந்தது.
 
முதல் கட்டமாக தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள ராணுவநிலைகளை தாக்கி சேதப்படுத்தவும், 2மிவது கட்டமாக தமிழக கோவில்கள், துறைமுகங்கள் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம், சென்டிரல் ரெயில் நிலையம், கல்பாக்கம் அணுமின்நிலையம், பெங்களூரில் செயல்பட்டு வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் ஆகியவற்றை தகர்க்கவும் திட்டமிட்டுள்ளது தெரியவந்தது.
 
கடற்கரையோரமாக அமைந்துள்ள கல்பாக்கம் அணுமின்நிலையம் ஏற்கனவே மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படைவீரர்களின் கண்காணிப்பில் இயங்கி வரும் நிலையில் தற்போது அங்கு மேலும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 
மோம்ப நாய் உதவியுடன் அணுமின்நிலையத்தின் அனைத்து பகுதிகளும் சோதனை செய்யப்பட்டு வருகிறது. அணுமின்நிலையத்திற்குள் செல்லும் வாகனங்களில் ஏதேனும் சட்ட விரோதமாக பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றனவா என்பதை கண்டறிய நவீன கருவிகள் மூலம் முழுமையாக பிஸ்கேன்பீ செய்யப்படுகிறது. ஊழியர்கள் பலத்த சோதனைக்கு பின்னர் உள்ளே அனுப்பப்படுகின்றனர். ஊழியர்களின் அடையாள அட்டை பிஸ்கேன்பீ செய்யப்படுகிறது.
 
இவை தவிர மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ராஜாங்கம், இளங்கோ உள்பட போலீசார் கிழக்குகடற்கரைசாலை மற்றும் சந்திப்புகளில் திவீர வாகனசோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

No comments:

Post a Comment