Monday, September 1, 2014

ஜப்பான் பிரதமர் ஸின்சோ அபே உயர் மட்ட பிரதிநிதிகள் குழுவொன்றுடன் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்!

Monday, September 01, 2014
ஜப்பான் பிரதமர் ஸின்சோ அபே உயர் மட்ட பிரதிநிதிகள் குழுவொன்றுடன் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 7ம் மற்றும் 8ம் திகதிகளில் ஜப்பான் பிரதமர் அபே இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பிற்கு அமைய அவர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். இரு நாடுகளுக்கும் இடையில் ராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்ட அறுபது ஆண்டுகள் பூர்த்தியானதனை கொண்டாடும் வகையில் கடந்த ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜப்பானுக்கு விஜயம் செய்திருந்தார். 24 ஆண்டுகளின் பின்னரே ஜப்பானிய பிரதமர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் அபேயின் இலங்கை விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும்படுத்தும் என எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜப்பானிய முக்கிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுடன் பிரதமர் அபே இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். இலங்கையின் சமூகப் பொருளாதார அபிவிருத்தியில் ஜப்பானின் பங்கு மிகவும் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment