Monday, August 25, 2014
இலங்கை::இலங்கையிலும் இலங்கை மக்களும் இன்று உண்மையான சுதந்திரத்தை அனுபவித்து வருகிறார்கள் என இலங்கை வந்துள்ள இந்திய ஊடகவிய லாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் மிகவும் பழைமையான மிகப் பெரிய ஊடகவியலாளர்கள் தொழிற்சங்க சம்மேளனத்தின் அங்கத்தவர்கள் அடங்கிய குழுவொன்று இலங்கை வந்துள்ளது.
இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தின் அழைப்பை ஏற்றே அவர்கள் இலங்கை வந்துள்ளனர். கொழும்பு டி. ஆர். விஜேவர்த்தனா மாவத்தையில் அமைந்துள்ள சீனோர் ரெஸ்டூரண்டில் நடைபெற்ற விசேட விருந்துபசார வைபவத்தில் கலந்துகொண்டு பேசும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் ஆலோசனைக்கமைய அமைச்சின் செயலர் சரித்த ஹேரத் இந்திய ஊடகவியலாளர் களுக்கான விருந்துபசாரத்தை ஏற்பாடு செய்திருந்தார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த இந்திய ஊடகவியலாளர் தொழிற்சங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் பரமானன் பாண்டே கூறும் போது. எமது தொழிற்சங்கமே மிகவும் பழைமையானது. இதில் 60,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். நாங்கள் 29 பேர் வந்திருக்கிறோம்.
இலங்கை மிகவும் சுத்தமான, அழகான நாடு. எல்லா இடங்களிலும் ஒழுங்குமுறை பேணப்படுகிறது. தலைநகர் ஒன்றை இவ்வாறு சுத்தமாக அழகாக பேணுகிறார்கள் என்பதை பார்க்கும் போது எமக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
கடந்த 17 வருடங்களுக்கு முன் வந்திருக்கிறோம். ரூபவாஹினி கூட்டுத்தாபனம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு வந்தோம். அப்போது அவை அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக இருந்தன. எல்லா இடங்களிலும் இராணுவத்தினர் குவிந்து காணப்பட்டனர். வீதித் தடைகள் கூடுதலாக இருந்தன. சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. இன்று இ
வை முற்று முழுதாக காணமுடியவில்லை. இன்று நிறுவனங்க ளுக்கு முன்னால் மண்மூடைகள் அடுக்கப் படவில்லை. பாதுகாப்பு வேலிகள். மதில்கள் இல்லை. அனைத்தும் நீக்கப்பட்டு ள்ளன. இலங்கையும் மிக சுதந்திரமாக இருக்கிறது. மக்களும் இன்று சுதந்திரமாக வாழ்கிறார்கள். என்றும் தெரிவித்தனர். இலங்கை இன்று சமாதானம். அபிவி ருத்தியை நோக்கி சென்று கொண்டிருப்பதை நேரடியாக கண்ட இந்திய ஊடகவியலாளர்க ள். ஆச்சரியப்பட்டார்கள். வியந்தார்கள் இவை அனைத்தும் 2005 ஆம். ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பதவியேற்ற பின்னரேயே நிகழ்ந்தன என்று ஊடகத்துறை அமைச்சின் செயலர் சரித்த ஹேரத் தெரிவித்தார்.
30 வருடங்களாக இருந்த கொடூர யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார். பாரிய அளவில் நாடு முழுவதும் பரந்தளவில் பொருளதார. உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. இந்த மாற்றத்தை கண்டே இந்தியவர்கள் இன்று ஆச்சரியப்படுகின்றனர். பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ. அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட அரசின் அனைத்து அமைச்சுக்களும் இந்த மாற்றத்திற்கு நேரடியாக பங்களிப்பு செய்கின்றன. இதனை இந்தியர்கள் இன்று தெளிவாக தெரிவித்தனர்.
நாட்டுக்கு எதிராக பல்வேறு சக்திகள் செயற்படுகின்றன. அவற்றை தோற்கடிக்க செயற்பட நாம் ஆயத்தமாகவே இருக்கிறோம். இவ்வாறன ஒரு சந்தர்ப்பத்தில் இந்திய ஊடகவியலாளர்களா கிய உங்கள் அனைவரையும் மிகவும் அன்பாக. கெளரவமாக வரவேற்கிறோம்.
இந்த சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுத்த இலங்கை பத்திரிகையாளர் சங்கத்துக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலர் சரித்த ஹேரத் தெரிவித்தார்.
இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முதித காரியகரவனவும் இங்கு உரையாற்றினார்.

No comments:
Post a Comment