Sunday, August 24, 2014

ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கப்படும்: இஸ்ரேல்!

Sunday, August 24, 2014
டெல்அவிவ்::தெற்கு இஸ்ரேல் பகுதியில், ஹமாஸ் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில் 4 வயது குழந்தை பலியானதாக இஸ்ரேல் செஞ்சுலுவை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
காஸா முனையிலிருந்து, நேற்றுமுன் இரவு தெற்கு இஸ்ரேலை நோக்கி ஹமாஸ் நடத்தியத் தாக்குதலில், மழலையர் பள்ளி அருகே நின்று கொண்டிருந்த கார் தகர்க்கப்பட்டது. இதில் காரில் இருந்த 4 வயது குழந்தை பரிதாபமாக பலியானதாக இஸ்ரேல் செஞ்சுலுவை சங்கத்தை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்மின் நெதன்யாகு விடுத்துள்ள எச்சரிக்கையில், "ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு தக்க பதில் தரப்படும்" என்றார்.
 
காஸா - இஸ்ரேல் இரு தரப்பிலும் நடந்துவரும் பிரச்சினையில் எகிப்து தலையிட்டு, போர் நிறுத்தத்திற்கான ஏற்பாடுகளை செய்தது. ஆனால் இரு தரப்பினருக்கும் உடன்பாடி ஏற்படவில்லை.

No comments:

Post a Comment