Friday, July 18, 2014

வெளிநாட்டு நிபுணர் குழுவின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வதனையும் நிராகரிப்பதும் அரசாங்கமே தீர்மானிக்கும்: கெஹலிய ரம்புக்வெல்ல!

Friday, July 18, 2014
வெளிநாட்டு நிபுணர் குழுவின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வதனையும் நிராகரிப்பதனையும் அரசாங்கமே தீர்மானிக்க வேண்டுமென ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போனவர்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூவர் அடங்கிய நிபுணர் குழு ஒன்றை நியமித்துள்ளார்.

இந்த நிபுணர் குழுவிற்கு சேர் டெஸ்மன் டி சில்வா தலைமை தாங்குகின்றார்,

இ;ந்தக் குழுவின் பரிந்துரைகளையும் ஆலோசனைகளையும் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளுமா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதன் போது அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பதிலளித்திருந்தார்.
ஆலோசனைகளை ஆலோசனைகளாக கருத வேண்டுமெனவும் திட்டங்களை அமுல்படுத்துவது அரசாங்கத்தின் தீர்மானமாகும் எனவம் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு காலத்திற்கு காலம் இவர்கள் ஆலோசனைகளை வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment