Thursday, July 10, 2014

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட தென்னாபிரிக்க உப ஜனாதிபதி ரமபோஷ ஆளுநருடன் கலந்துரையாடல்!

Thursday, July 10, 2014
இலங்கை::யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் தொடர்பில் தென்னாபிரக்க அரசினால் நியமிக்கப்பட்டிருக்கும் சிறப்பு தூதுவரும் தென்னாபிரிக்க அரசின் உப ஜனாதிபதியுமான சிறில் ரமபோஷ குழுவினருடன் வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி கலந்துரையாடினார்.
 
உலங்குவானூர்தி மூலம் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கிற்கு வருகை தந்த ரமபோஷ குழுவினரை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி, வட மாகாண பிரதம செயலாளர்
 
திருமதி.விஜயலட்சுமி ரமேஸ், ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், யாழ் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோர் தமிழ் பாரம்பரிய முறைப்படி வரவேற்றார்கள்.
 
தொடர்ந்து ரில்கோ விருந்தினர் விடுதியில் வட மாகாண முதலமைச்சருடன் சந்திப்பினை மேற்கொண்ட குழுவினர் மீண்டும் உலங்குவானூர்தி மூலம் பலாலி சென்றடைந்தனர்.
 
பின்னர்  மயிலிட்டியிலுள்ள விருந்தகத்தில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி, யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா ஆகியோருடன் கலந்துரையாடினார். இதன்போது யுத்தம் நிறைவடைந்த பின் மேற்கொள்ளப்பட்ட மீள்குடியேற்றம், உட்கட்டுமான அபிவிருத்தி, வாழ்வாதார மேம்பாட்டு செயற்திட்டங்கள், நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பாக ஆளுநர் விரிவாக எடுத்துரைத்தார்.
 
தொடர்ந்து தென்னாபிரிக்க குழுவினருக்கு ஆளுநரினால் மதிய உணவும் ஞபாகார்த்த பரிசில்களும் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment