Sunday, July 27, 2014

இந்தியாவை மலைபோல் நம்பிக்கொண்டு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் சொந்த நாட்டுக்கு எதிர்ப் பிரசாரம் செய்து வரும் தமிழ்த் தேசியக் புலிகூட்டமைப்பிற்கு அதிர்ச்சி வைத்தியம்!


Sunday, July 27, 2014
இலங்கை::இந்தியாவை மலைபோல் நம்பிக்கொண்டு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் சொந்த நாட்டுக்கு எதிர்ப் பிரசாரம் செய்து வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு புதிதாக ஆட்சி பீடமேறிய நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசாங்கம் அதிர்ச்சி வைத்தியம் ஒன்றைக் கொடுத்துள்ளது.
 
கடந்த வாரம் டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி தலைமையில் இந்தியாவிலிருந்து இலங்கை வந்திருந்த இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் ஐவரடங்கிய குழுவினால் தெரிவிக்கப்பட்ட அந்நாடு தொடர்பான உண்மையான பல விடயங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
 
டாக்டர் சுப்ரமணிய சுவாமி தலைமையில் டாக்டர் சேஷாத்ரி சாரி, டாக்டர் சுரேஷ் பிரபு, முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் ஸ்வபன் தாஸ்குப்தா, செல் தேசிய கன்வீனர் ஆகிய ஐந்து பேர், அடங்கிய இந்திய கொள்கை வகுப்பாளர்களால் மோடியின் கீழ் இந்தியா என்னும் கருப்பொருளில் நடைபெற்ற கருத்தரங்கிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அதிர்ச்சி மருந்து வழங்கப்பட்டுள்ளது.
 
இந்தக் கருத்தமர்வில் இலங்கையில் உள்ள புத்திஜீவிகள் மற்றும் அரசியலாளர்கள் மற்றும் பிரதானிகள் மத்தியில் உரை நிகழ்த்திய இக் குழுவினர், இந்தியாவின் கொள்கைகள் பற்றிய விளக்கத்தையும் இந்தியா பொருளாதார ரீதியாகவே அனைத்துச் செயற்பாடுகளையும் மேற்கொள்ளும் என்றும் அண்டை நாடுகளுடன் குறிப்பாக இலங்கையுடன் மிகுந்த நட்புடன் தொழிற்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
 
அத்துடன் இலங்கைக்கு எதிராக எந்தவொரு அரசியல் காய்நகர்த்தல்களையும் இந்தியா மேற்கொள்ள மாட்டாது என அவர்கள் சூசகமாக தெரிவித்துள்ளனர்.
 
இலங்கைக்கு எதிராக ஐ. நா. மனித உரிமை அமைப்பினால் கொண்டு வரப்பட்டுள்ள மனித உரிமை மீறல் விசாரணைகளுக்கு இந்தியா ஒரு போதும் ஆதரவு அளிக்க மாட்டாது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் இலங்கையின் இன அழிப்பு என்ற சம்பவம் ஒருபோதும் நடைபெறவில்லை என்றும் இது தொடர்பாக ஐ.நா. மனித உரிமை அமைப்பின் அறிக்கையில் கூட சுட்டிக் காட்டப்படவில்லை என்றும் அவர்கள் அங்கு குறிப்பிட்டுள்ளனர்.
 
இந்தக் கருத்தமர்வில் கலந்துகொண்ட சுமந்திரன் மற்றும் சம்பந்தன் போன்றோருக்கு இந்திய கொள்கை வகுப்பாளர்கள் தெரிவித்த இக் கருத்துக்கள் இடிபோல் இருந்திருக்கும் எனினும் அதுவே உண்மையான நிலைப்பாடாக அமைந்துள்ளது.
 
இந்த கொள்கை வகுப்பாளர்களால் மறைமுகமாக தமிழ்த் தேசியக் கூட்மைப்புக்கு தெரிவிக்கப்பட்ட விடயம் என்னவெனின் இந்தியா ஒருபோம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நம்பவில்லை என்பதே. மோடி அரசாங்கம் பதவியேற்ற பின் அப் பதவியேற்பு நிகழ்விற்கு கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதி அவர்கள் வடக்கின் முதலமைச்சரை அழைத்திருந்த போதும் அதற்கு வடக்கு முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் மறுப்புத் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
 
தமக்கு நேரடியாக அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதே இதற்கான காரணமாக அவர் தெரிவித்திருந்தார். இவரது செயல் எவ்வாறு இருக்கிறது எனின் காயப்பட்டு கிடக்கும் ஒவர் தனது காயத்திற்கான மருந்து தன்னைத் தேடி வந்து போடப்பட வேண்டும் என்பது போலவே காணப்படு கின்றது.
 
தமிழ்த் தேசிய மூச்சில் இருப்பதாக வட., கிழக்கு மக்களுக்கு போலி வேசம் போட்டுக் காட்டிக்கொண்டு இருக்கும் கூட்டமைப்புக்கு இன்று இந்தியக் கொள்கை வகுப்பாளர்களால் பேதி மருந்து வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment