Thursday, June 5, 2014

அவுஸ்திரேலியா அரசாங்கம் இரண்டாவது ரேந்து படகை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்குவதற்கான ஒப்பந்தம் கொழும்பில் கைச்சாத்து!

Thursday, June 05, 2014
இலங்கை::அவுஸ்திரேலியா அரசாங்கம் இரண்டாவது ரேந்து படகை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்குவதற்கான ஒப்பந்தம் கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது.
 
இலங்கையின் சார்பில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ஜயனாத் கொலம்பகேயும் அவுஸ்திரேலியா சார்பில் இலங்ககைக்கான அவுஸ்திரேலியா உயர் ஸ்தானிகர் ரொபின் மூடி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.

கொழும்பிலுள்ள கடற்படை தலைமையகத்தில்  (03) நடைபெற்ற இந்த நிகழ்வில் கடற்படையின் நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் நெயில் ரொசெய்ரோ, கடற்படையின் திட்ட மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் கொமொடோர் சமந்த விமலதுங்க, அவுஸ்திரேலியாவின் சுங்கம் மற்றும் கரையோர பாதுகாப்பு சேவை பிரிவைச் சேர்ந்த சூஈ நைட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
 
இலங்கையில் நடைபெற்ற பொது நலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கு கொள்ள இலங்கைக்கு வருகைதந்த அவுஸ்திரேலிய பிரதமர் டொனி அபோர்ட், கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த இலங்கை கடற்படையின் சயுர என்ற கப்பலை 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் திகதி பார்வையிட்டதுடன் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு. கோட்டாபய ராஜபக்ஷவின் பங்குபற்றலுடன் அங்கு நடைபெற்ற உயர் மட்ட கூட்டம் ஒன்றிலும் கலந்து கொண்டார்.
 
இதன் போது சட்டவிரோத ஆட்கடத்தல் செயற்பாடுகளை தடுக்க இலங்கை கடற்படையினர் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்த அவுஸ்திரேலிய பிரதமர், இலங்கை கடற்படையின் கடல் ரோந்து நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் வகையில் இரண்டு ரோந்து படகுகளை அன்பளிப்பு செய்வதாகவும் வாக்குறுதியளித்தார்;
 
இவ்வாறு வாக்குறுதியளித்த படகுகளில் முதலாவது ரோந்த படகு அவுஸ்திரேலியாவில் வைத்து இவ்வருடம் ஏப்ரல் மாதம் அன்பளிப்பாக உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதை அடுத்து ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி முதலாவது படகு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இதற்கு பி – 350 என பெயரிடப்பட்டது.

இந்த கப்பல் விசாலமான இந்து சமுத்திரத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment