Monday, June 16, 2014

நாட்டின் நல்லிணக்க முனைப்புக்களுக்கு முரணான வகையில் வட மாகாண சபையின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் செயற்படுகின்றார்: விமல் வீரவன்ச!

Monday, June 16, 2014இலங்கை::நாட்டின் நல்லிணக்க முனைப்புக்களுக்கு முரணான வகையில் வட மாகாண சபையின் முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் செயற்பட்டு வருவதாக வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
 
அண்மையில் குருநகரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் விக்னேஸ்வரன் பங்கேற்கவில்லை. 110 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்ட வீடமைப்பு திட்ட ஆரம்ப நிகழ்வில் முதலமைச்சர் பங்கேற்கவில்லை.

மக்களுக்கு நன்மை ஏற்படு;ம் இவ்வாறான திட்டமொன்றின் ஆரம்ப நிகழ்வினை புறக்கணிப்பது, நல்லிணக்க முனைப்புக்குளுக்கு புறம்பானது என அமைச்சர் வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் மக்களை  புலிகளின் பிடியிலிருந்து மீட்டெடுத்தமைக்காக இந்த அரசாங்கத்திற்கு விக்னேஸ்வரன் நன்றி பாராட்ட வேண்டுமே தவிர, அரசாங்கத்தின் நடவடிக்கைகளை புறக்கணிக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
 
வட மாகாண முதலமைச்சர் மக்களை சமாதானம் நோக்கி நகர்த்த வேண்டுமே தவிர, குரோத உணர்வுகளைத் தூண்டக் கூடாது என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment