Thursday, June 5, 2014

காங்., பொது செயலர் பதவிக்கு குறி : சிதம்பரம் - வாசன் இடையே புதிய போட்டி!!

Thursday, June 05, 2014
சென்னை::அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவியை பிடிப்பதில், முன்னாள் மத்திய அமைச்சர்கள் சிதம்பரம் - வாசன் இடையே புதிய போட்டி ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதில், ஜெயிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பும், கட்சி வட்டாரத்தில் உருவாகி உள்ளது. 'தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து, ஞானதேசிகனை நீக்க வேண்டும்' என, கடந்த வாரத்தில், சிதம்பரம் ஆதரவு அணியினர், திடீரென குரல் எழுப்பினர். அதற்கு பதிலடியாக, அடுத்த நாள், வாசன் தரப்பில் இருந்து அறிக்கை வெளியானது. பரபரப்பு இரு அறிக்கைகளுக்கும்
பின்னணியில், சிதம்பரமும் வாசனும் உள்ளனர் என்பதை அறியாத, காங்கிரசார் இருக்க
முடியாது. ஆனாலும், இந்த அறிக்கைகள் ஏற்படுத்திய பரபரப்புக்கு இடையில், சத்தியமூர்த்தி பவனில், ஆதரவாளர்களை சந்தித்த வாசன், 'இதுபோன்று அறிக்கை வெளியிடுவது கட்சியின் வளர்ச்சிக்கு உதவாது. கட்சிக்குள் சொல்ல வேண்டிய விஷயத்தை, வெளிப்படுத்துவது கட்சி விரோதமானது' என, பேட்டி அளித்து, அறிக்கை போருக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைப் போல் காட்டினார். அதற்கு பிறகு, சிதம்பரம் தரப்பு அமைதியாகி விட்டதற்கு காரணம், வாசன் பேட்டி தான் எனக்கூற முடியாது. அதற்குள் சிதம்பரம் தரப்பினரின், திட்டம் மாறி விட்டது தான் உண்மை காரணம். எதிர்ப்பு கட்சியிலும், பார்லிமென்டிலும் பதவி பெற வேண்டும் என்பது தான், இப்போது சிதம்பரத்தின் இலக்கு என்கிறது, காங்கிரஸ் வட்டாரம்.
இதுகுறித்து, அந்த வட்டாரம் மேலும் கூறியதாவது: கர்நாடகாவில் இருந்து சிதம்பரத்தை, ராஜ்யசபாவுக்கு அவரை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தன. ஆனால், எதிர்ப்பு காரணமாக, அதை சிதம்பரம் இழக்க வேண்டிய நிலை வந்துள்ளது. டில்லியில் முகாமிட்டு, வாசன் செய்த, 'லாபியின்' காரணமாக, கர்நாடக காங்கிரசில், சிதம்பரத்திற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
மேலும், கர்நாடகா காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக, தமிழகத்தை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., செல்லக்குமார் செயல்பட்டு வருகிறார். அவரும் தன் பங்கிற்கு இந்த வேலையை செய்துள்ளார். வாசன் - சிதம்பரம் இருவருக்கும் எதிராக செயல்பட்டு வரும் செல்லக்குமார், சென்னையில் அவரது ஆதரவாளர்களை சமீபத்தில் சந்தித்து உள்ளார். மிகவும் கடினம்
இதற்கிடையில், தமிழக காங்கிரஸ் தலைமை பதவியை ஏற்பதால், எந்த புண்ணியமும் கிடைக்காது என்பதை, சிதம்பரம் மட்டுமல்ல; வாசனும் உணரத் துவங்கி விட்டார்.தமிழகத்தில் கட்சி இருக்கும் பரிதாப நிலையில், அதை தூக்கி சுமப்பது மிகவும் கடினம் என, கருதுவதாக
தெரிகிறது. அதனால், அந்த பதவியில் தன் ஆதரவாளர் இருந்தால் போதும் என்ற முடிவுக்கு வந்து விட்டனர். இப்போது, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவியை பெறுவதற்காக காய் நகர்த்துகின்றனர். காய் நகர்த்த... காங்கிரஸ் பொதுச் செயலாளராகி விட்டால், வேறு மாநிலங்கள் மூலம், ராஜ்யசபாவுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் வாசனும் சிதம்பரமும் நினைக்கின்றனர். இந்த பதவியை பெறுவதன் மூலம், கட்சியிலும் செல்வாக்குடன் திகழ முடியும் என்பதால், ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்ற இலக்குடன், இப்போது காய் நகர்த்த துவங்கி உள்ளனர். இதில் வெற்றி பெறப் போவது யார் என்பது, மேலிடத்தின் ஆதரவை பொறுத்து தெரியவரும். இவ்வாறு, காங்கிரஸ் வட்டாரம் தெரிவித்தது.

No comments:

Post a Comment