Friday, June 13, 2014
இலங்கை::இலங்கையின் போர் வலயங்களில் இயல்பு வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதில்
இலங்கை அரசாங்கம் சவால்களை சமாளித்துள்ளதாக அதன் ஜெனீவாவுக்கான நிரந்தர
பிரதிநிதி ரவிநாத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 26வது அமர்வின் நேற்றைய நிகழ்வில்
ரவிநாத் ஆரியசிங்க உரையாற்றினார். இதன்போது கருத்துரைத்த ரவிநாத்
ஆரியசிங்க, போருக்கு பின்னரான இலங்கை அரசாங்கத்தின் முக்கிய
முன்னெடுப்புக்கள் யாவும் சர்வதேசத்தினால் புறந்தள்ளப்பட்டுள்ளது.
இது இலங்கைக்கு மாத்திரமல்ல. போருக்கு பின்னரான இயல்பு வாழ்க்கைக்கு
ஒத்துழைத்த சர்வதேச உள்ளுர் நிறுவனங்களுக்கும் மரியாதைக் குறைவை
ஏற்படுத்தியுள்ளது. 30 வருடங்களாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை
அரசாங்கம் பாரிய முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்றும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment