Wednesday, June 18, 2014

நாட்டில் இடம்பெற்று வரும் வன்முறைச் சமப்வங்ளை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!

Wednesday, June 18, 2014
நாட்டில் இடம்பெற்று வரும் வன்முறைச் சமப்வங்ளை தடுத்து நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் தற்போது இடம்பெற்ற வரும் இன மத மோதல்களை தடுத்து நிறுத்த அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், மேலும் இந்த மோதல்கள் பரவுவதற்கு அனுமதியளிக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது. முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கண்டிக்கப்பட வேண்டியது என குறிப்பிட்டுள்ளது.

அண்மைய ஆண்டுகளில் இலங்கையில் இடம்பெற்ற மிக மோசமான இன வன்முறையாக பேருவளை, அலுத்கம சம்பவங்களை குறிப்பிட முடியும் எனவும், இந்த வன்முறைகள் ஏனைய இடங்களில் பரவுவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் சர்வதே மன்னிப்புச் சபையின் ஆசிய பிராந்திய வலய பிரதிப் பணிப்பாளர் டேவிட் கிரிப்த்ஸ் (
David Griffiths) தெரிவித்துள்ளார். மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையி;ல் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டிய அதேவேளை, முஸ்லிம்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். பாதுகாப்புத் தரப்பினர் தங்களது கடமைகளை உரிய விதத்தில் செய்திருந்தால் இவ்வாறான வன்முறைகள் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளார்.

போராட்டம் நடத்தப்பட்டால் வன்முறைகள் வெடிக்கும் என முஸ்லிம் தரப்பினர் அரசாங்கத்திற்கு எச்சரித்த போதிலும் அதனை கருத்திற் கொள்ளாது பொதுபல சேனா இயக்கத்திற்கு அனுமதி வழங்கியமையே இந்த வன்முறைகளுக்கான பிரதான ஏதுவென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மைக்காலமாக சிறுபான்மை மதச் சமூகங்கள் மீது பெரும்பான்மை கடும்போக்குவாத அமைப்புக்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment