Sunday, June 1, 2014

இலங்கைக்கு இந்தியா கட்டளையிட முடியாது: நிமல் ஸ்ரீபாலா டிசில்வா!

Sunday, June 01, 2014
இலங்கை::இலங்கை அரசுக்கு இந்தியா கட்டளையிட முடியாது என்று அந்நாட்டு ஆளும் கட்சியான இலங்கை விடுதலைக் கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான நிமல் ஸ்ரீபாலா டிசில்வா தெரிவித்தார்.
 
இலங்கையில் வாழும் மக்களுக்கு எந்த வகையில் அதிகாரத்தை பகிர்ந்தளிப்பது என்பது குறித்து கட்டளையிட இந்தியாவுக்கோ அல்லது வேறு எந்த நாடுக்கோ உரிமையில்லை.
 
இலங்கை பாராளுமன்றத் தேர்வுக் குழு தான், அதிகாரப் பகிர்வுக் குறித்து விவாதிப்பதற்கான அமைப்பாகும். இந்த விவகாரத்தில் இறுதி முடிவை இலங்கை பாராளுமன்றம் தான் எடுக்க முடியும். இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது குறித்து எப்படி இலங்கை அறிவுரை கூறுவதில்லையோ, அதேபோல் இலங்கையில் உள்ள மாகாணங்களுக்கு எந்த வகையில் அதிகாரங்களை பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதை இந்தியா கூறகூடாது. 1987-ஆம் ஆண்டு இந்தியா-இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில்தான், 13-வது சட்டதிருத்தம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அது இந்தியாவால் திணிக்கப்பட்ட ஒன்று.
 
ஆகையால், அது சட்டப்படி செல்லுபடியாகுமா என்பது கேள்விக்குரியது. அதற்கு அப்போதே எதிர்கட்சியாக எதிர்ப்பு தெரிவித்திருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது, என்று டிசில்வா கூறினார்.

No comments:

Post a Comment