Friday, June 06, 2014
இலங்கை::சிவில் பாதுகாப்பு படைக்கு யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 58பேர் நேற்று முதல் சேவையில் இணைத்துக் கொள்ளப் பட்டுள்ளனர். அதன்படி நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு பலாலி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா பூஜித ஜயசுந்தர, யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி உதயப்பெரேரா, யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் றொகான் டயஸ், பிரதேச செயலாளர்கள் , கிராமசேவகர்கள், இராணுவ உயரதிகாரிகள் கலந்து கொண்டு நியமனக் கடிதங்களையும் வழங்கி வைத்தனர். மேலும் குறித்த நிகழ்வில் சிவில் பாதுகாப்பு படையில் இணைந்துள்ள இளைஞர் யுவதிகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத் தக்கது.
யாழ். மாவட்டத்தில் புதிதாக சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட இளைஞர், யுவதிகளுக்கான நியமன கடிதங்கள் இன்று வழங்கப்பட்டன. பலாலி இராணுவத்தளத்தில் இன்று காலை 11.00 மணியளவில் அவர்களுக்கான நியமன கடிதங்களை சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் அத்தியட்சகர் அட்மிரல் அனந்த பீரிஸ் மற்றும் யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரேரா ஆகியோர் வழங்கினர். யாழ். மாவட்டத்தில் முதல் கட்டமாக 48 இளைஞர்களும் 18 யுவதிகளுமாக 66 பேர் சிவில் பாதுகாப்பு குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். அவர்களுக்கான நியமனக் கடிதங்களே இன்று வழங்கப்பட்டன.
இவர்களுக்கு அவர்களின் கல்வித்தகமை மற்றும் திறமை அடிப்படையில் பொருத்தமான வேலைகள் வழங்கப்படவுள்ளதாக சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் அத்தியட்சகர் அட்மிரல் அனந்த பீரிஸ் இதன்போது தெரிவித்திருந்தார். மேலும் இவர்களுக்கு முதல் கட்டமாக 18 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் எனவும், இவர்கள் ஆறுமாத காலம் திறமையாக வேலை செய்தால் மேலதிக கொடுப்பனவுகளுடன் மோட்டார் சைக்கிள், துவிச்சக்கர வண்டிகளும் இலவசமாக வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

No comments:
Post a Comment