Saturday, June 14, 2014

இலங்கை நீர்கொழும்பைச் சேர்ந்த 14 மீனவர்கள் விடுதலை: ராமநாதபுரம் கோர்ட் உத்தரவு!

Saturday, June 14, 2014
ராமநாதபுரம்: இலங்கை நீர்கொழும்பைச் சேர்ந்த மீனவர்கள் 14 பேர், விசைப்படகில் எல்லை தாண்டி வந்து தூத்துக்குடி கடல் பகுதியில் மீன் பிடித்தபோது கடந்த மே 25ல் கடலோர காவல்படையினரால் பிடிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் தூத்துக்குடி தருவைக்குளம் மரைன் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். மரைன் போலீசார் அவர்களை கைது செய்து, மே 26ல் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். ஜூன் 4ல் இலங்கை மீனவர்கள் ராமநாதபுரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களை ஜூன் 18 வரை நீதிமன்ற காவலில் சிறையில் வைக்க கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில் நல்லெண்ண அடிப்படையில் 14 இலங்கை மீனவர்களையும் விடுவிக்க தூத்துக்குடி கலெக்டர் ரவிக்குமாருக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. தூத்துக்குடி கலெக்டர் இலங்கை மீனவர்களை விடுவிக்க தூத்துக்குடி மாவட்ட எஸ்பிக்கு பரிந்துரைத்தார்.
இதையடுத்து தருவைக்குளம் மரைன் போலீசார் இலங்கை மீனவர்களின் வழக்கை வாபஸ் பெறுவதாக கூறி, மீனவர்கள் விடுதலை குறித்த அரசின் உத்தரவு நகலை ராமநாதபுரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

இதன் அடிப்படையில் இலங்கை மீனவர்கள் 14 பேரையும் விடுதலை செய்து தலைமை குற்றவியல் நீதிபதி தர்மன் உத்தரவிட்டார். இவர்கள் அனைவரையும் இலங்கைக்கு அனுப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

No comments:

Post a Comment