Wednesday, April 23, 2014
இலங்கை::இலங்கையுடனான உறவுகள் மேலும் வலுவடையும் என அவுஸ்திரேலியா நம்பிக்கை
வெளியிட்டுள்ளது. சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிரான
நடவடிக்கைகளில் இரு நாடுகளும் கை கோர்த்துக் கொண்டுள்ளதாக குடிவரவு
அமைச்சர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத ஆட்கடத்தல்
நடவடிக்கைகளை தடுப்பதற்கு எடுக்கப்பட்ட முனைப்புக்களைப் போன்றே எல்லை
தாண்டிய குற்றச் செயல்களை தடுக்கவும் முனைப்பு காட்ட வேண்டியது அவசியமானது
என அவர் தெரிவித்துள்ளார்.
சட்ட ரீதியான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்கும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது ஓர் ஆரோக்கியமான மாற்றம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்ட ரீதியான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்கும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது ஓர் ஆரோக்கியமான மாற்றம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க நியாயமான காரணங்கள் இருந்தால்
அவர்களுக்கு நிச்சமாக சந்தர்ப்பம் வழங்கப்படு;ம் எனவும், ஆபத்தான கடல்
வழியப் பயணங்களை தெரிவு செய்வதனை தவிர்க்க வேண்டுமெனவும் அவர்
குறிப்பிட்டுள்ளார். சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுக்க இலங்கை
அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment