Wednesday, April 9, 2014

பகிரங்க மன்னிப்பு கோரினார் மஹியங்கன விஜித தேரர்!

Wednesday, April 09, 2014
இலங்கை::மகாநாயக்க தேரர்கள், பௌத்த தேரர்கள் மற்றும் பௌத்த மக்கள் ஆகியோரிடம் பகிரங்க மன்னிப்பு கோருகின்றேன் என மஹியங்கன வட்டரக்க விஜித தேரர் தெரிவித்தார்.
 
என்னால் பௌத்த சமயத்திற்கு ஏற்பட்ட அவமானத்திற்காகவே மன்னிப்பு கோருகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.
 
இந்த மன்னிப்பினை ஒருபோதும் வாபஸ் பெறமாட்டேன் என அவர் தெரிவித்தார்.
 
வில்பத்து பிரதேசத்தில் மீள்குடியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பில்
மஹியங்கன வட்டரக்க விஜித தேரர் தலைமையிலான ஊடகவியலாளர் மாநாடு கொழும்பு நிப்போன் ஹோட்டலில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
இந்த ஊடகவியலாளர் மாநாடு ஆரம்பமாவதற்கு முன்னரே பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர் குறித்த ஹோட்டலிற்கு வந்தனர்.
 
இதனால் குறித்த ஹோட்டேலில் பதற்றமான நிலை காணப்பட்டது. இதன்போது பௌத்த மக்களிடம் மன்னிப்பு கோருமாறு வட்டரக்க விஜித தேரர் பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட ஞானசார தேரரினால் பலவந்தப்படுத்தப்பட்டார். இதனையடுத்தே மஹியங்கன வட்டரக்க விஜித தேரர் பகிரங்க மன்னிப்பு கோரியமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment