Friday, April 25, 2014
டோக்கியோ::சீனாவுக்கும், ஜப்பானுக்கும் கிழக்கு சீன கடல் பகுதியில் உள்ள சில சிறிய
தீவுகள் யாருக்கு சொந்தம் என்பதில் நீண்ட காலமாக பிரச்சினை இருந்து
வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஜப்பானில் பயணம் மேற்கொண்டார்.
இந்தப் பயணத்தின்போது அவர் ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயை சந்தித்து
பேசினார். இந்த சந்திப்பின் போது இரு தரப்பு பாதுகாப்பு உடன்படிக்கை
கையெழுத்தானது.
இதுதொடர்பாக டோக்கியோவில் ஜப்பான் பிரதமருடன் ஒபாமா நேற்று நிருபர்களை சந்தித்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் பேசுகையில், ‘‘ஜப்பானுடனான பாதுகாப்பு
உடன்படிக்கையில், சீன–ஜப்பான் தீவு பிரச்சினையும் இடம் பெற்றுள்ளது. ஆனால்
இந்த தீவுகள் விவகாரத்தில் நான் சிவப்பு கோடு (அபாய எல்லை) எதையும்
வரையவில்லை. கடல் எல்லை தொடர்பான பிரச்சினையில் அமைதித் தீர்வுதான் காணப்பட
வேண்டும்’’ என கூறினார்.

No comments:
Post a Comment