Tuesday, April 8, 2014

சர்வதேச விசாரணைக் குழுவினர் நாட்டுக்குள் பிரவேசித்து விசாரணை நடத்த அனுமதிக்கப் போவதில்லை- ஜி.எல். பீரிஸ்!

Tuesday, April 08, 2014
இலங்கை::சர்வதேச விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளையினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
சர்வதேச விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நவநீதம்பிள்ளை அரசாங்கத்திடம் கோரியிருந்தார். சர்வதேச விசாரணைக் குழுவினர் நாட்டுக்குள் பிரவேசித்து விசாரணை நடத்த அனுமதிக்கப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கத்தின் அனுமதியின்றி இலங்கையில் விசாரணை நடத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment