Wednesday, April 2, 2014

நவநீதம் பிள்ளையின் விசாரணைக் குழு இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதியில்லை: அரசாங்கம்!

Wednesday, April 02, 2014
இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் விசாரணைக் குழு இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதியளிக்கப் போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
 
நவநீதம்பிள்ளை, நிபுணர் குழு ஒன்றை நிறுவி, அவர்களை இலங்கைக்கு அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு, கிழக்கிற்கு விஜயம் செய்து சாட்சியங்களை திரட்டுவதற்கு அனுமதியளிக்குமாறு நிபுணர் குழு கோரியுள்ளது.
 
இலங்கையை போர்க் குற்றவாளிகளாக்கும் முயற்சிகளுக்கு அரசாங்கம் அனுமதியளிக்காது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. எனவே, நாட்டுக்கு வெளியே இருந்து கொண்டு குறித்த நிபுணர் குழு விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment