Friday, April 25, 2014

பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக குழுவினர் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதாணியுடன் சந்திப்பு!

 Friday, April 25, 2014
இலங்கை::பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைகழகத்தின் 21 மாணவ அதிகாரிகள் அடங்கலாக பல்கலைக்கழக பிரதிநிதிகள் குழுவினர் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதாணி ஜெனரல் ஜகத் ஜயசூர்யவை அவரின் காரியாலயத்தில்     (ஏப். 22) சந்தித்தனர்.

இதற்கமைய தேசிய பாதுகாப்பு மற்றும் போர் பயிற்சி பாடத்திட்டங்கள் சம்பந்தமாக ஐந்து நாள் விஜயம் மேற்கொன்ட மேஜர் ஜெனரல் நொஏல் இஸ்ரஏல் கோகார் தலைமையிலான குழுவினர் ஏப் 20 ஆம் திகதி இலங்கைக்கு சமூகம் தந்திருந்தனர்.
 
இந் நிகழ்வின் போது பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதாணி ஜெனரல் ஜகத் ஜயசூர்யவுக்கும் பல்கலைக்கழக பிரதிநிதிகள் குழுவினரும் இடையில் கல்விசார் நலன்கள் மற்றும் தேசிய பாதுகாபு தொடர்பில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் சந்திப்பை நினைவு கூறுமுகமாக நினைவு சின்னங்களையும் பரிமாறிக்கொண்டனர்.

No comments:

Post a Comment