Monday, April 14, 2014

சிங்கள மக்களுக்கு மாத்திரம் இன்றி, ஏனைய மக்களுக்கும் சுயமரியாதையும், கௌரவமும் உண்டு: டி.இ.டபிள்யு.குணசேகர!

Monday, April 14, 2014
இலங்கை::சிங்கள மக்களுக்கு மாத்திரம் இன்றி, ஏனைய மக்களுக்கும் சுயமரியாதையும், கௌரவமும் காணப்படுவதாக, சிரேஷ்ட அமைச்சர் டி.இ.டபிள்யு.குணசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சுதந்திரத்துக்கு முன்னர் ஒரு முஸ்லிம் அரசியல் கட்சியேனும் இருக்கவில்லை.

ஆனால் தற்போது 10க்கும் மேற்பட்ட முஸ்லிம் அரசியல் கட்சிகள் இருக்கின்றன.

அதேபோன்று பௌத்த, சிங்கள கட்சிகளும் அதிகரித்துள்ளன.

அனைத்து இன மக்களுக்கும் அவரவர்களின் இனங்களை பெருமையாக கருதுகிறார்கள்.

இலங்கைக்கு ஆதரவளிக்கின்ற சீனா, ரஷ்யா, கியுபா, வியட்னாம் போன்ற நாடுகள் இடதுசாரிகளாக காணப்படுகின்றன.

இந்த நிலையில் ஏனைய இனங்களை மதித்து நடக்கக்கூடிய மனிதத்துவத்தை பெற முடியாவிட்டால், இலங்கையில் ஐக்கியத்தை ஏற்படுத்த முடியாது என்று அமைச்சர் சி.இ.டபிள்யு.குணசேகர தெரிவித்துள்ளார்.
 

 

 

No comments:

Post a Comment