Tuesday, April 15, 2014

சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த சீனப் பிரஜைகள் இருவர் கைது!

Monday, April 14, 2014
இலங்கை::இலங்கையின் வடபகுதியிலுள்ள பூநகரிப் பகுதியில் சட்டவிரோதமாக வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த இரண்டு சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
 
உல்லாசப் பயணிகளுக்கான விசாவில் வந்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். தங்க நகைகள் எனக் கூறி போலி ஆபரணங்களை இவர்கள் பூநகரி நகரப் பகுதியில் விற்பனை செய்துகொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டனர்.
 
கைது செய்யப்பட்ட இவர்கள், வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, ஏப்ரல் 24ம் தேதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

No comments:

Post a Comment