Tuesday, April 22, 2014

ஜனாதிபதியின் பாரியார்களுக்கான மாநாடு: மலேசிய மாநாட்டில் ஜனாதிபதியின் பாரியாரான சிரந்தி ராஜபக்ஷ!

Tuesday, April 22, 2014
இலங்கை::ஜனாதிபதியின் பாரியார்களுக்கான மாநாடு மலேசியாவின் தலைநகரான கோலாம்பூரில்  நடைபெறுகிறது .இலங்கையின் சார்பில் ஜனாதிபதியின் பாரியாரான சிரந்தி ராஜபக்ஷவும் இம்மாநாட்டில் கலந்துக் கொள்கிறார்.


மலேசிய பிரதமர் மொஹமட் நஜீப் ரஸாக் தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில்
22 நாடுகளைச் சேர்ந்த ஜனாதிபதியின் பாரியார்கள் கலந்துக்கொள்கின்றனர்.

இம்மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக மலேசியா சென்ற ஜனாதிபதியின் பாரியாரான சிரந்தி ராஜபக்ஷவுக்கு இந்நாட்டு அமைச்சரான இப்றாஹீம் அன்ஸார் மற்றும் அமைச்சின் அதிகாரிகளால் அமோக வரவேற்பளிக்கப்பட்டது.இலங்கைக்கான மலேசிய தூதுவரின் பாரியாரான நிஷா அன்ஸாரும் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டார்.

No comments:

Post a Comment