Tuesday, April 22, 2014

த.தே.கூட்டமைப்பின் மே தின நிகழ்வுகள் இம்முறை சாவகச்சேரியில் நடைபெறும்- மாவை எம்.பி.!

Tuesday, April 22, 2014
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வுகள் இம்முறை சாவகச்சேரி நகரசபை மைதானத்தில் நடைபெறுமென தமிழரசுக் கட்சியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த மாவை சேனாதிராசா, இம்முறை மே தின ஊர்வலம் புத்தூர்ச் சந்தியில் இருந்து ஆரம்பித்து சாவகச்சேரி நகர சபை மைதானம் வரையில் சென்று அங்கு மே தின நிகழ்வுகள் நடைபெறும் எனத் தெரிவித்தார்.
 
இக் கலந்துரையாடலில், வட மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment