Sunday, April 13, 2014

புலி மீளிணைவு கதை, மூவர் படுகொலை! அரசும், இராணுவமும் கூறும் கதைகளில் நம்பிக்கை இல்லை- சர்வதேச விசாரணை வேண்டுமாம் : புலிகளின் துணை படையான (புலி) கூட்டமைப்பு!

Sunday, April 13, 2014
இலங்கை::புலி மீளிணைவு கதை, மூவர் படுகொலை! அரசும், இராணுவமும் கூறும் கதைகளில் நம்பிக்கை இல்லை- சர்வதேச விசாரணை வேண்டுமாம் : புலிகளின் துணை படையான (புலி) கூட்டமைப்பு.
 
புலிகள் மீளிணைவதாக சொல்லப்பட்ட கதை, அதன் பின்னணியில் மூன்று தமிழ் இளைஞர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் அரசும், இராணுவமும் கூறும் கதைகளில் எமக்கு எள்ளளவும் நம்பிக்கை இல்லை என தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
எனவே இந்தப் படுகொலைச் சம்பவங்கள் குறித்த சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்று நடத்தப்பட்டு, உண்மை கண்டறியப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான மாவை சேனாதிராசா வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை அரசு இந்த விடயங்கள் தொடர்பில் நீதியான விசாரணை ஒன்றை நடத்தும் என்பதிலும் எமக்கு நம்பிக்கை இல்லை. எனவே, சர்வதேச தலையீட்டில் இந்த விசாரணை இடம்பெற வேண்டும் எனவும் அவர் கூறினார்.
அரசும், இராணுவமும் கூறிவரும் புலிகள் மீளிணைவுக் கதைகளில் எமக்கு நம்பிக்கை இல்லை. இது சோடிக்கப்பட்ட நாடகம் என்றே நாங்கள் ஆரம்பத்தில் இருந்து கூறி வருகிறோம். மக்களுக்கும் அரசு கூறும் புலி மீளிணைவுக் கதை தொடர்பில் உண்மை நிலைப்பாடு தெரியாது.
 
புலிகள் மீளிணைவு, அதனைத் தொடர்ந்து மூன்று இளைஞர்கள் கடந்த வியாழக்கிழமை சுட்டுக்கொலை செய்யப்பட்டமை ஆகிய சம்பவங்கள் தொடர்பில் இராணுவத் தரப்பிலும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களே தெரிவிக்கப்பட்டு வருகின்றன எனவும் மாவை எம்.பி. தெரிவித்தார்.
இராணுவம் கூறும் எதனையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. மேலும், புலிகள் மீளிணைவுக் கதையின் பின்னர் நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் இராணுவத்தரப்பில் தெரிவிக்கப்பட்டு வரும் தகவல்கள் எமக்கு மேலும் சந்தேகத்தையே ஏற்படுத்தியுள்ளன.
எனவேதான் இந்தச் சம்பவங்கள் குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம் எனவும், தமிழ்த் தேசியக் (புலி)

கூட்டமைப்பு எம்.பி. மாவை சேனாதிராஜா மேலும் கூறினார். 

No comments:

Post a Comment