Thursday, April 17, 2014

புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச தலைவர் கே.பி மீதான அபாய அறிவிப்பு நீக்கம்!

Thursday, April 17, 2014இலங்கை::புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச தலைவராக இருந்த கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் மீது சர்வதேச பொலிஸாரான இன்டர்போலினால் விடுக்கப்பட்டிருந்த அபாய அறிவிப்பு நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியர்சகருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
2009ஆம் ஆண்டின் பின்னர் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்பதாலேயே கே.பி மீதான அபாய அறிவிப்பு நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment