Sunday, April 6, 2014

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தொடரப் போவதாக புலம்பெயர் புலிகளின் பினாமி தமிழ் அமைப்புக்கள் அறிவித்துள்ளன!!

Sunday, April 06, 2014
இலங்கை::இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தொடரப் போவதாக புலம்பெயர் புலிகளின் பினாமி தமிழ் அமைப்புக்கள் அறிவித்துள்ளன.

பிரித்தானிய தமிழர் பேரவை, க்ளோபல் தமிழ் போரம், நாடு கடந்த தமிழீழ இராச்சியம், கனேடிய தமிழ் காங்கிரஸ், அவுஸ்திரேலிய தமிழர் காங்கிரஸ் உள்ளிட்ட 16 புலம்; பெயர் தமிழ் அமைப்புக்களை இலங்கை அரசாங்கம் தடை செய்துள்ளது.

புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாகத் தெரிவித்து இந்த அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக சவால் விடத் திட்டமிட்டுள்ளதாக பிரித்தானிய தமிழர் பேரவை அறிவித்துள்ளன.

கருத்துச் சுதந்திரமும் ஜனநாயகமும் நிலவி வரும் நாடுகளில் வாழ்ந்து வருவதனால் இவ்வாறான தீவிரவாத தந்திரோபாயங்களுக்கு அஞ்சப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளன.

No comments:

Post a Comment