Saturday, April 12, 2014

தமிழ்நாட்டில் அடுத்த வாரம் மோடி - சோனியா பிரசாரம்!

 Saturday, April 12, 2014
சென்னை::தமிழக மக்களின் ஆதரவைத் திரட்ட தேசிய கட்சிகளின் மூத்த தலைவர்கள் அடுத்த வாரம் தமிழ்நாட்டில் முற்றுகையிட திட்டமிட்டுள்ளனர்அடுத்த வாரம் மோடி_ சோனியா போட்டி பிரசாரம்நடைபெற உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு வருகிற 24_ந்தேதி ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த 40 தொகுதிகளிலும் கடந்த ஒரு மாதமாக தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பா.ஜ.க. கூட்டணி, காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க., இடது சாரிகள் என 5 முனை போட்டி நிலவுவதால் பிரசாரம் அனல் பறக்கும் வகையில் உள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் பிரசாரம் ஓய இன்னும் 12 நாட்களே உள்ளன. இதனால் 40 தொகுதிகளிலும் அடுத்த வாரம் உச்சக்கட்ட பிரசாரம் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகள் மத்தியில் ஆட்சி அமைக்க முக்கிய பங்கு வகிப்பதாக உள்ளதால் அகில இந்திய தலைவர்களின் பார்வை தமிழகம் மீது திரும்பியுள்ளது. தமிழக மக்களின் ஆதரவைத் திரட்ட தேசிய கட்சிகளின் மூத்த தலைவர்கள் அடுத்த வாரம் தமிழ்நாட்டில் முற்றுகையிட திட்டமிட்டுள்ளனர்.
பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஏற்கனவே தமிழ்நாட்டில் திருச்சி, சென்னையில் இரு கட்டங்களாக பிரசாரம் செய்து முடித்துவிட்டார். அவரை மேலும் இரண்டு தடவை தமிழ்நாட்டுக்கு அழைத்து வர தமிழக பா.ஜ.க. தலைவர்கள் தீவிர முயற்சிகளில் <டுபட்டனர்.
வடமாநிலங்களில் மோடி பிரசாரம் செய்து வந்ததால் தமிழக சுற்றுப் பயண தேதியை முடிவு செய்வதில் இழுபறி நீடித்துக் கொண்டே இருந்தது. தற்போது மோடி தமிழ்நாட்டுக்கு 2 தடவை வந்து பிரசாரம் செய்ய இருப்பது உறுதியாகிவிட்டது.
சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் எச்.ராஜாவுக்காக பிரசாரம் செய்ய வருவதாக மோடி வாக்குறுதி கொடுத்திருந்திராம். எனவே ராஜாவுக்கு ஆதரவு திட்ட மோடி பொதுக்கூட்டம் ஒன் றில் பேசுவது உறுதியாகி விட்டது.
சிவகங்கை அருகில் உள்ள ராமநாதபுரம் தொகுதியிலும் பா.ஜ.க. போட்டியிடுவதால் இரு தொகுதிகளுக்கும் பொதுவாக காரைக்குடியில் அவர் பேசும் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது. அதே தினத்தன்று வைகோவுக்காக விருதுநகரிலும், பொன்.ராதாகிருஷ்ணனுக்காக கன்னியாகுமரியிலும் மோடி பேச உள்ளார்.
அதுபோல அடுத்த கட்டமாக சுதீசுக்காக சேலத்திலும், அன்புமணி ராமதாசுக்காக தர்மபுரியிலும், சி.பி.ராதா கிருஷ்ணனுக்காக கோவையிலும் மோடி பொதுக் கூட்டங்களில் பேசுவார் என்று தெரிய வந்துள்ளது. முதல் கட்ட பிரசாரத்தின்போது மோடி தென்சென்னையில் போட்டியிடும் இல.கணேசனை ஆதரித்து சென்னையில் பேச வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
நரேந்திர மோடியைத் தொடர்ந்து பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி, வெங்கய்யா நாயுடு, நிதின்கட்காரி ஆகியோர் சென்னையில் நடக்கும் கூட்டங்களில் பேச வர உள்ளனர். இது பா.ஜ.க. தொண்டர்களிடம் இப்போதே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.க. கூட்டணியில் உள்ள ம.தி.மு.க.வின் வைகோ, தே.மு.தி.க.வின் எல்.கே.சுதீஷ், பா.ம.க. வின் அன்புமணி ஆகியோருக்காகவும் மோடி பிரசாரம் செய்ய உள்ளதால் கூட்டணி கட்சியினரும் உற்சாகம் அடைந்துள்ளனர். இதனால் மோடி பேச உள்ள 6 பொதுக்கூட்டங்களுக்கான ஏற்பாடுகள் சுறுசுறுப்பாக செய்யப்பட்டு வருகின்றன.
பா.ஜ.க. தலைவர்களின் பிரசாரத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் இருவரும் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளனர். சோனியா வரும் 16_ந்தேதி கன்னியாகுமரி தொகுதிக்கு வந்து காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரை ஆதரித்து கூட்டத்தில் பேச உள்ளார்.
கன்னியாகுமரியில் சோனியா பேசும் பொதுக் கூட்ட மைதானத்தை தேர்வு செய்யும் பணியில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஈ<டுபட்டுள்ளனர்.
பாதுகாப்பு குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில் கன்னியாகுமரி டி.எஸ்.பி. செல்வராஜ் மற்றும் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் ஆகியோர் நேற்று  கன்னியாகுமரியில் உள்ள மைதானங்களை பார்வையிட்டனர்.
4 வழிச்சாலை பகுதியில் உள்ள ஒரு இடமும், முருகன் குன்றம் கார்மல் மாதா பள்ளி அருகே உள்ள மைதானமும் ஆய்வு செய்யப்பட்டது.
மீண்டும் 19_ந்தேதி சோனியா புதுச்சேரிக்கு வந்து காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமிக்கு ஆதரவு திரட்டவுள்ளார். புதுச்சேரியில் அவர் பேசும் இடத்தை தேர்வு செய்ய ஆலோசனை நடந்து வருகிறது.
தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி, நட்சத்திர பேச்சாளர்கள் இல்லாததால் பிரசாரம் செய்ய இயலாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சோனியா வருவது தமிழக காங்கிரஸ் காரர்களுக்கு உற்சாகமாவும் ஆறுதல் அளிப்பதாகவும் இருக்கும் என்று தெரிகிறது.
சோனியாவை தொடர்ந்து அடுத்த வார இறுதியில் ராகுல் தமிழகம் வர உள்ளார். கொங்கு மண்டலத்தில் அவர் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து சில கூட்டங்களில் பேச உள்ளார்.
ராகுல்காந்தி மேற்கு மண்டலத்தில் ரோடு ஷோ நடத்தினால் தொண்டர்களிடம் எழுச்சியை ஏற்படுத்த முடியும் என்று தமிழக காங்கிரசார் எதிர்பார்க்கிறார்கள். ராகுல் வரும் தேதி இன்னும் முடிவாகவில்லை.
அனேகமாக 17_ந்தேதி முதல் 20_ந்தேதிக்குள் அவர் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை அதுபற்றி தெரிய வரும்.
சோனியா 16_ந்தேதி வருவது உறுதியாகிவிட்ட நிலையில் மோடியும் வரும் 15_ந்தேதி முதல் 20_ந்தேதிக்குள் அடுத்தடுத்து 2 தடவை வர உள்ளார். இதனால் தமிழ்நாட்டில் அடுத்தவாரம் சோனியா, மோடி இருவரின் போட்டி பிரசாரம் பெரும் விறுவிறுப்பை ஏற்படுத்துவதாக அமையும்.
நரேந்திர மோடி முதலில் எந்த நகருக்கு செல்வார் என்பது இன்னும் உறுதியாகவில்லை. ஓரிரு நாட்களில் அவர் சுற்றுப் பயண விவரம் தெரிய வந்ததும் பா.ஜ.க. பிரசாரத்தில் மேலும் சூடு பிடிக்கும்.

No comments:

Post a Comment