Tuesday, April 29, 2014
திருவனந்தபுரம்: தங்கம் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் சுங்க பிரவினரால் இலங்கையர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவனந்தபுரம் சர்வதேச வானூர்த்தி நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்திய ரூபாயில் சுமார் 11 லட்சம் ரூபா பெறுமதியான 360 கிராம் தங்கத்தை இவர் தமது வாயில் மறைந்து கொண்டுச் செல்ல முற்பட்டுள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இதனிடையே, தங்கம் கடத்தியக் குற்றச்சாட்டின் பேரில் இலங்கை பெண்கள் மூவர் பெங்களுர் வானூர்தி நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்படும் போது இவர்களிடம் இருந்து 1.16 கிலோ கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது
No comments:
Post a Comment