Friday, April 11, 2014

புலிகளின் புதிய தலைவர்களின் சடலங்கள் அனுராதபுரம் நீதிவானிடம்!

Friday, April 11, 2014
இலங்கை::வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தில் இருந்து சுமார் 15 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள வெடிவைத்தகல் கிராமத்தில் இடம் பெற்ற மோதலில் கொல்லப்பட்ட புலிகளின் புதிய தலைவர்களின்  சடலங்கள் பதவியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதேவெளை இச் சடலங்களின் மரணவிசாரணை நடத்தும் அதிகாரமும்  அனுராதபுரம் நீதிவானிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாவும தெரியவருகின்றது.
 
வவுனியா நெடுங்கேணி சேமமடு வீதியில் உள்ள வெடிவைத்தகல் பிரதேசத்தில்  மக்கள் குடிமனையற்ற காட்டுப் பகுதியில் புலிகளின் மூன்று உறுப்பினர்கள் என தெரிவிக்கப்பட்ட கோபி, அப்பன், தேவிகன் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
 
இராணுவத்திற்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த பிரதேசத்தை நேற்று மாலை இராணுவத்தினர் சுற்றி வளைத்து தேடுதல் நடத்தியபோது இராணுவத்தால் தேடப்பட்டு வந்த கோபி உள்ளிட்ட மூவர் அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்டதாகவும் அதனையடுத்து இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் அவர்கள் மூவரும் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

No comments:

Post a Comment