Tuesday, April 22, 2014

இலங்கைக்கு எதிராக தடைகளை விதிக்குமாறு கனேடிய அரசாங்கத்திடம் அந்நாட்டு புலிகளின் ஆதரவு தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை!

Tuesday, April 22, 2014
ரொறன்ரோ::இலங்கைக்கு எதிராக தடைகளை விதிக்குமாறு கனேடிய அரசாங்கத்திடம் அந்நாட்டு தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
 
இலங்கை உயர் அதிகாரிகள் ராஜதந்திரிகளுக்கு எதிராக பயணத் தடை விதிக்க வேண்டுமென 80 கனேடிய தமிழர் அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து கோரியுள்ளன. அனைத்து புலிகள்  ஆதரவு தமிழ் அமைப்புக்களையும் இணைத்து தமிழ் மஹா சங்கமென்ற ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
 
பயணத் தடை விதிப்பது குறித்து தமிழ் மஹா சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 16 புலம்பெயர் (புலிகள்  ஆதரவு) தமிழ் அமைப்புக்கள் தடை செய்யப்பட்டமை கண்டிக்கப்பட வேண்டியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment