Sunday, April 27, 2014

ராஜீவ் கொலையாளிகளுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த சதாசிவம் ஓய்வு: தலைமை நீதிபதியாக ஆர்.எம்.லோதா இன்று பதவியேற்பு!

Sunday, April 27, 2014
புதுடெல்லி::ராஜீவ் கொலையாளிகளுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த சதாசிவம்  ஓய்வு: தலைமை நீதிபதியாக ஆர்.எம்.லோதா இன்று பதவியேற்பு.
 
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக ஆர்.எம். லோதா இன்று பதவியேற்கிறார். அவருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். 
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த தமிழகத்தை சேர்ந்த பி. சதாசிவம் நேற்று ஓய்வு பெற்றார். அவருக்கு சுப்ரீம் கோர்ட்டில் வழியனுப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. இதையடுத்து புதிய தலைமை நீதிபதியாக ஆர். எம். லோதா இன்று பதவியேற்கிறார். அவருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், மத்திய அமைச்சர்கள், உயரதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.
நீதிபதி ஆர்.எம். லோதா, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் 1949 செப்டம்பர் 2ம் தேதி பிறந்தவர். இவரது தந்தை எஸ்.கே. மால் லோதா ராஜஸ்தான் ஐகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றியவர். ஆர்.எம். லோதா, ஜோத்பூரில் பிஎஸ்சி பட்டமும், அதை தொடர்ந்து எல்எல்பி பட்டமும் பெற்று 1973 முதல் ராஜஸ்தான் ஐகோர்ட்டில் வக்கீலாக பிராக்டீஸ் செய்தார். சிவில், கம்பெனி சட்டம், குற்றவியல் சட்டம், வரி மற்றும் லேபர் சட்டங்களில் தேர்ந்த ஆர்.எம்.லோதா கடந்த 1990 முதல் 1992 வரை ராஜஸ்தான் ஐகோர்ட்டில் மத்திய அரசு வக்கீலாகவும் பணியாற்றினார். 
1994 ஜனவரி 31ல் ராஜஸ்தான் ஐகோர்ட் நிரந்தர நீதிபதியாக பதவியேற்றார். ஒரே மாதத்தில் மும்பை ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்ட அவர் மும்பை ஐகோர்ட்டில் 13 ஆண்டுகள் பணியாற்றினார். அதன் பின் 2007 பிப்ரவரி 2ம் தேதி மீண்டும் ராஜஸ்தான் ஐகோர்ட்டுக்கு மாற்றப்ப்டடார். 2008 மே 13ல் பாட்னா ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். 2008 டிசம்பர் 17ல் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். காவிரி நதி நீர் பிரச்சினை தொடர்பான வழக்கு, முல்லை பெரியாறு வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை விசாரித்த ஆர்.எம். லோதா இன்று முதல் செப்டம்பர் 27ம் தேதி வரை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பணியாற்றவுள்ளார். 

No comments:

Post a Comment