Saturday, April 5, 2014

பயங்கரவாதிகள் உருவாதை தடுக்கவே வடக்கில் இராணுவம்: பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ

Saturday, April 05, 2014
இலங்கை::மற்றுமொரு யுத்தத்தை தடுக்கவே இராணுவம் வடக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மற்றுமொரு ஆயுதக் கிளர்ச்சி இடம்பெறுவதனை தடுக்கும் நோக்கிலேயே படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கொடூரமான புலிகளின் யுத்தம் காரணமாக கடந்த 30 ஆண்டுகளாக நாடு பாரிய துன்பங்களை அனுபவிக்க நேரிட்டதாகத் தெரிவித்துள்ளார். நாட்டில் மீண்டும் அவ்வாறான ஓர் துன்பியல் அனுபவத்தை ஏற்படுத்தக் கூடிய யுத்தம் இடம்பெறக் கூடாது என்பதில் அரசாங்கம் மிகத் தெளிவான கொள்கைகளை பின்பற்றி வருவகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்..

முப்பது வருட காலமாக நிலவிய பயங்கரம் மீண்டும் உருவாகாமல் தடுக்கவும் பயரங்கரவாதிகள் மீண்டும் உருவாகாமல் தடுக்கவுமே இராணுவத்தினர் வடக்கில் நிலைகொண்டுள்ளனர் .
கேப்பாபுலவு மாதிரிக் கிராமத்தில் மீள்குடியேற்ற அமைச்சினால் கட்டப்பட்ட 101 வீடுகளின் திறப்புக்களை மக்களிடம் கையளித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது விமானப்படை காணிகளில் இருந்து 29 காணிகள் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது.

இராணுவத்தை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் வடக்கிலிருந்து  அகற்றப்போவதில்லை என்று தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய அதற்காக யாருடைய அச்சுறுத்தலையும் பொருட்படுத்தப் போவதில்லை என்றும் தெரிவித்தார். மீண்டும் புலிகள் உருவாகாமல் இருக்க  இராணுவத்தினர் வடக்கில் அவசியம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இராணுவமுகாம் ஒரு பிரதேசத்தில் இருந்தால் அந்தப் பிரதேசத்தின் வருமானம் அதிகரிக்கும் எனத் தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய இங்கு மொழிப் பிரச்சினை காரணமாகவே இராணுவத்திற்கும் மக்களுக்கும் நல்ல உறவில்லை என்றும் தெரிவித்தார். இதற்காக ஜனாதிபதி மும்மொழிகளையும் கற்பிற்குடம் முயற்சியில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மக்கள் இராணுவத்தினருடன் நண்பர்களாக இருக்க வேண்டும் என்று தெரிவித்த இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மக்களும் இராணுவமும் ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்புடனும் நெருக்கத்துடனும் பழக வேண்டும் என்றும் அதன் மூலம் மீண்டும் பயங்கரவாதம் உருவாகாமல் தடுக்கலாம் எனவும் தெரிவித்தார்.
அத்துடன் இறுதிப்போர் நடந்த முள்ளிவாய்க்காலுக்குச் சென்ற கோத்தபாய அங்கும் ஒன்பது வீடுகளை மக்களிடம் கையளித்துள்ளார்.
வடக்கின் ஒவ்வொரு இராணுவ முகாமும் பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கிலேயே உருவாக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். சில பிரச்சினைகள் காரணமாக வடக்கின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் சிறிதளவிலான தாமதங்கள் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment