Thursday, April 10, 2014

புலிகள் மீண்டும் ஒன்றிணைவதாக எழுந்துள்ள சந்தேகத்தின் அடிப்படையில்: வட - கிழக்கில் இரண்டு மாதங்களில் 65 பேர் கைது!

Thursday, April 10, 2014
இலங்கை::புலிகள் மீண்டும் ஒன்றிணைவதாக எழுந்துள்ள சந்தேகத்தின் அடிப்படையில், கடந்த இரண்டு மாதங்களில் 65 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காவற்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன இதனை கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து தெரிவித்துள்ளார்.

இலங்கையில் புலிகள் கோபி என்பவர் மீளிணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அவரை தேடும் பணிகள் தொடர்ந்து இடம்பெறுகிறது.

இதற்காக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 65 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 5 பேர் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் காவற்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த ஊடக சந்திப்பில் தொடர்ந்து கருத்துரைத்த காவற்துறை பேச்சாளர், உந்துருளிகளை செலுத்தும் போது, பிரதான விளக்கை ஒளிர செய்து பயணிக்குமாறு கோரினார்.

இதன் மூலம் விபத்துக்களை தவிர்த்துக் கொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், பண்டிகைக் காலங்களில் நிதி நிறுவனங்களுக்கு பாதுகாப்பு வழங்க அந்த நிறுவனங்களுக்கு அருகில் ஆயுதம் ஏந்திய சிவில் காவற்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்படவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment