Monday, April 14, 2014
இலங்கை::திருகோணமலை கடற்பரப்பில் சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 26 மீனவர்களையும் திருகோணமலை பதில் நீதவான் திருநாவுக்கரசு திருச்செந்தில்நாதன் சரீரப்பிணையில் திங்கட்கிழமை (14) மாலை விடுவித்துள்ளார்.

இம்மீனவர்கள் ஒவ்வொருவரையும் 50,000 ரூபா பெறுமதியான சரீரப்பிணையில் விடுவித்த நீதவான், அடுத்த மாதம் 11ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டார்.
திருகோணமலை துறைமுக பரப்பில் நெய்மலைக்கு அருகில் 03 படகுகளில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, கிண்ணியாவைச் சேர்ந்த இம்மீனவர்கள் 26 பேரையும் திங்கட்கிழமை (14) கடற்படையினர் கைதுசெய்தனர். இதன் பின்னர் இம்மீனவர்களை துறைமுக பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்தனர். இவர்களது படகுகள் கடற்படைத்தளத்தில் வைக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment