Thursday, April 3, 2014

சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் சுனாமி: 5 பேர் பலி!

Thursday, April 03, 2014
சான்டியாகோ::தென் அமெரிக்க நாடான சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வடக்கு கரையோரப் பகுதியில் சுனாமி தாக்கியது. நிலநடுக்கத்தின் தாக்கம் ரிக்டரில் 8.3 ஆக பதிவாகியது. உள்ளூர் நேரப்படி நேற்றுமுன்தினம் இரவு 8.46 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சிலியின் வடக்கு கடற்கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.வடக்கு சிலியில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறினர்.
சின்குவா செய்தி நிறுவன தகவலின் படி வடக்குப் பகுதியில் இருந்து 10,000 பேர் பத்திரமான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. நிலநடுக்கத்தை தொடர்ந்து மின்சாரம் தடைபட்டதால் நகரமே இருளில் மூழ்கியது.
முதல்கட்ட தகவலின்படி 5 பேர் பலியானது தெரியவந்துள்ளது. உள்துறை அமைச்சர் ரோட்ரிகோ, 5 பேரும் இடிபாடுகளில் சிக்கி பலியாகியிருக்கலாம் என கூறியிருக்கிறார்.
முன்னதாக 8.0 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்திருந்த்து. ஆனால் தற்போது நிலநடுக்கம் 8.3 ஆக பதிவாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து, வடக்கு சிலியில் உள்ள ஒரு சிறைச்சாலையில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் தப்பித்தனர். இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் 

No comments:

Post a Comment