Sunday, April 13, 2014
இலங்கை::எதிர்வரும் 2014-04-20 ம் திகதி இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ள பல்வேறுபட்ட அங்குராப்பன நிகழ்வுகளில் பங்குகொள்வதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ அவர்கள் வருகை தரவுள்ளார்.
இலங்கை::எதிர்வரும் 2014-04-20 ம் திகதி இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ள பல்வேறுபட்ட அங்குராப்பன நிகழ்வுகளில் பங்குகொள்வதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ அவர்கள் வருகை தரவுள்ளார்.
இந்நிகழ்வு சம்மந்தமாக உள்ளூர் பத்திரிகையாளர்களை தெளிவுபடுத்தும் பத்திரிகையாளர் சந்திப்பு, நேற்று தென்கிழக்கு பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச்.எம்.அப்துல் சத்தார், கலை கலாச்சார பீடாதிபதி எம்.அப்துல் ஜப்பார், விரிவுரையாளர் எம்.ஏ.எம்.சமீம், சிரேஷ்ட விரிவுரையாளர் கே.எம்.முபாரக், சிரேஷ்ட உதவிப் பதிவாளர் எம்.எச்.நபார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில்;
எதிர்வரும் 2014-04-20 ம் திகதி காலை 10.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ள நிகழ்வில் அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ அவர்களினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அஷ்ரப் ஞாபகார்த்த நூலகமும் வர்த்தக முகாமைத்துவ பீடத்துக்கான கட்டிடத் தொகுதியும் திறந்து வைக்கப்படவுள்ளதுடன் ஒலுவில் வளாகத்திலும் சம்மாந்துறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடத்திலும் மாணவர் விடுதிக்கான அடிக்கல்களும் நடப்படவுள்ளன.
அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ அவர்கள் இப்பல்கலைக்கழகத்துக்கு இரண்டாவது தடவையாக வருகை தரவுள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ அவர்களின் மகிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் கீழ் பல்கலைக் கழகங்களின் உட்கட்டமைப்பை அபிவிருத்தி செய்யும் திட்டத்தில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு சுமார் 360 மில்லியன் ரூபா செலவில் கட்டி முடிக்கப்பட்ட மேற்படி கட்டிடங்களை மாணவர்களின் பாவனைக்கு அவர் திறந்து வைக்கவுள்ளார்.
சுமார் 2500 பேர் பங்குகொள்ளக் கூடிய மக்கள் சந்திப்பு ஒன்றும் இங்கு இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ அவர்களுடன் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க அவர்களும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அரசியல் பிரமுகர்களும் உயர்கல்வி அமைச்சின் அதிகாரிகளும் உள்ளூர் பிரமுகர்களும் கலந்து கொள்ளவுள்ளன்னர்” என்றும் அவர் தெரிவித்தார்.



No comments:
Post a Comment