Wednesday, April 30, 2014

அடோல்ப் ஹிட்லர்: ஹிட்லரும் அவரது மனைவியும் மரணித்த ஏப்ரல் 30, 1945, உலக வரலாற்றில் பதியப்பட்ட நாள்!!

Wednesday, April 30, 2014
சென்னை::ஏப்ரல் 30, 1945.  உலக சர்வாதிகாரியாக பேசப்பட்ட அடோல்ப் ஹிட்லர் மரணிக்கிறார். இரண்டாம் உலக மகா யுத்தத்தில் பல திருப்பங்கள் ஹிட்லரின் மரணத்தின் பின்னர் ஏற்படுகிறது.
 
 ஒஸ்ரியாவில் (Austria)  20-04-1889 ல் பிறந்து,  ஜெர்மனியில் அரசியல் ஆட்சிபுரிந்து, உலகை தன் ஆட்சியின் கீழ் கொண்டுவர நினைத்த ஜெர்மனிய அதிபர் ‘அடோல்ப் ஹிட்லர்’ பற்றி அரியாதவர்கள் இருக்கமாட்டார்கள்.
 
ஆரம்பகாலத்தில் ஒர் தொண்டனாக செயற்பட்டு அதன் பின்னர் ஜேர்மனியின் இரானுவத்தில் இணைந்து கொண்ட ஹிட்லரின் கனவு 90 வீதம் நனவாகி இருந்தன. ஹிட்லரின் உச்சகட்ட காலமாக 1933-1945 காலப்பகுதிகளைக் குறிப்பிட முடியும். இக்காலகட்டத்தில்தான் இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

தனது மனைவி ஈவா பிரவ்னுடன் ஹிட்லர்
ஆரம்பகாலத்தில் ஒர் தொண்டனாக செயற்பட்டு அதன் பின்னர் ஜேர்மனியின் இரானுவத்தில் இணைந்து கொண்ட ஹிட்லரின் கனவு 90 வீதம் நனவாகி இருந்தன. ஹிட்லரின் உச்சகட்ட காலமாக 1933-1945 காலப்பகுதிகளைக் குறிப்பிட முடியும். இக்காலகட்டத்தில்தான் இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
1919ல் நிறைவடைந்த முதலாம் உலக யுத்தத்தில் ஜெர்மன் படுதோல்வி அடைந்திருந்தது.  இதன்காரணமாக நாட்டின் பொருளாதாரம் பாதாளத்தை நோக்கி வீழ்ச்சி கண்டு கொண்டிருந்தது. நாட்டின் இக்கட்டான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு தனது பேச்சாற்றலால் அரசியலில் குதித்து, ஜேர்மனிய மக்களை தன்வசப்படுத்தி தன் கனவுக்கு வித்திட்டார். ஒரு தபால் முத்திரையை கொள்வனவு செய்வதற்கு மக்கள் கொடுக்கும் பணத்தை விட, பல மடங்கு  அவற்றை அச்சிடுவதற்கான உற்பத்தி செலவுகள் அதிகரித்திருந்த காலம்.
உதாரணமாக ஒரு தபால் முத்திரையின் விலை 5 சதமாக இருக்கும் போது, அந்த முத்திரை ஒன்றை உற்பத்தி செய்வதற்கு 50 சதம் செலவிட வேண்டிய அளவுக்கு பொருளாதாரம் பாதாளத்துக்குள் சென்றிருந்தது. விவசாயம், கால்நடை எல்லாமே அழிந்து இரத்தக்கறை படிந்த ஜெர்மன் பூமியை மீட்டெடுத்து பசுமை புரட்சியால் வளப்படுத்தி மக்களுக்கு நிறைவான வாழ்க்கையை ஆரம்ப காலத்தில் தன் ஆட்சியால் செய்து வந்தார்.
நிர்வாணப்படுத்தப்பட்ட யூதப்பெண்கள்
என்றுமே அமெரிக்காவுக்குக் தலைசாய்த்துச் செல்லும் ஏனைய உலக நாடுகளுக்கு மாறாக தனது தலையை உயர்த்தி, ஜேர்மனியின் செல்வாக்கை உலகின் பக்கம் திரும்பச் செய்தார். தனது ‘நாசி’ படையணியை உருவாக்கி உள்நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் யூதர்களை இந்நாட்டில் இருந்து பூரணமாக அழித்துவிடும்படி கட்டளையிட்டார். யூதர்களால்தான் முதலாம் உலக யுத்தத்தில் ஜெர்மன் படு தோல்வியடைந்தது என்றும் யூதர்களின் பரம்பறையும் செல்வாக்கும் இந்நாட்டில் இராணுவ ஆட்சிக்கு தடைகளாக இருப்பதாலும் இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
ஜேர்மனிய சிறுமியுடன் பாசம்
அது மாத்திரமன்றி, மிகவும் படித்து அறிவுகூர்மையான மக்களாகவும்,  யூதப் பெண்கள் அழகிய தோற்றமுடையவர்களாக இருந்ததனாலும் யூதர்கள் பலிவாங்கப்பட்டனர். 1933 தொடக்கம் 1945 காலப்பகுதிவரைக்கும் சுமார் அறுபது இலட்சம் யூதர்கள் படு கொலை செய்யப்பட்டிருந்தனர். யூதர்களைக் கொள்வதற்காகவே பல வகையான தண்டனை முறைகளையும், சிறைச்சாலைகiளும் நாசி படையணினர் அறிமுகப்படுத்தி இருந்தனர்.
hitlerDM_468x422[1]
குழந்தைகளுடன் தனது பாசத்தை பகிரும்போது
பெண்களுக்கான நிர்வான குளியல் முறை:
குளித்துக் கொண்டிருக்கும் போதே தண்ணீருக்குப் பதிலாக விசவாயுக்களை தண்ணீர்க் குழாய்கள் ஊடாக அனுப்பி, அவர்கள் கொல்லப்படும் காட்சியை பார்த்து மகிழுதல்.
பெண்கைதிகள் ஒன்றுதிரட்டப்படல்
சிறுவர்கள்:
தன் பெற்றோர்கள் முன்னிலையில் அதே போல் தன் சகோதரன் முன்னிலையில் ‘பிஸ்டோல்’ எனப்படும் கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படல்.
சிறைப்படுத்தப்பட்டிருக்கும் அழகிய யூத குடும்பத்தினர்
பெற்றோர்கள்:
மனைவி பிள்ளைகளுக்கு முன்னால் நிறுத்தி இரு கைகளையும் பின்னால் கட்டி தலையில் கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படல்.
சிறைச்சாலை:
படித்தவர்களையும் முரண்பட்டவர்களையும் நாசி சிறைக்கூடத்தில் அடைத்து தினமும் பலவகையாக சித்திரவதைகளைக் கொடுத்து மெல்ல மெல்லக் கொல்லல்.
பெண்களுக்கான சிறைக்கூடம்:
அழகிய இளம் பெண்கள் இராணுவத் தளபதிகளுக்கு தினமும் விருந்து படைத்து திருப்திப்படுத்தப்பட்டு வந்தனர். பின்னர் மதுபானங்கள் மேனிகளில் ஊற்றப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டும், தலையில் வெடி வைத்தும், ஓட வைத்தும் சுடப்பட்டனர். ஒரு பெண் பலநூறு நாசிப் படையினருக்கு தன்னை அர்ப்பணித்து வருபவளாக இருப்பாள். ஆசை தீர்ந்த பின்னர் இவ்வாறான பெண்களை நச்சுவாயு கொண்டு அழித்துவிட்டு புதிய பெண் கைதிகளை இச்ச்றைகளில் அடைத்து மீண்டும் இவ்வாறே சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டு வந்தனர்.
உயிருடன் சுட்டெரிக்கும் உலை:
யூதர்களை பிடித்து கைகளையும் கால்களையும் கட்டி ஒரு இரும்புத் தட்டில் உயிரோடு வைத்து அதிவெப்பமூட்டப்பட்ட குகைக்குள் தள்ளிவிட்டுக் கொல்லல். இது பாண் சுடும் முறைபோல் (Bread Toaster) உள்ள கொலை முறையாகும். உயிரோடு சென்ற உடல் 10 செக்கன்களில் எழும்புக்கூடுகலாக மாத்திரம் தட்டத்தில் வந்து சேரும்.
இவ்வாறு யூதர்களைக் கொள்ளவதற்கு மட்டுமே உருவான தனது நாசிப்படையைப் பற்றி பெருமிதம் கொள்ளாத நாளே ஹிட்லருக்கு கிடையாது.
இருந்தும் ஜேர்மனியப் பெண்களுடன் அன்பாகவும் சகோதரத்துவமாக பழகும் தன்மையுடையவராகவும்   ஜேர்மனிய குழந்தைகளுடன் அன்பாக அரவணைத்து நடக்கும் குணமுடையவராகவும் பிராணிகளடன் செல்லமாக பழகும் இயல்புடையவராகவும் முதுமைக்கு மதிப்பளிப்பவராகவும் இருந்த வந்த ஹிட்லர் , யூதர்களை மாத்திரமே இலக்கு வைத்து வந்தார்.
ஹிட்லரின் காலத்திலேயே மோட்டார் உற்பத்தி ஜேர்மனியில் செல்வாக்குச் செலுத்தி இருந்தன. பி. எம். டபிள்யு(BMW), பெண்ஸ் (BENZ) எனப்படும் மோட்டார் வாகனங்கள் பிரபல்யமாகி, படைத் தளபதிகளுக்கு சவாரி செய்வதற்கும் வழங்கப்பட்டு வந்தன. இவ்வாறான மோட்டார் உற்பத்திகளால்  சரிந்து கிடந்த ஜெர்மனின் பொருளாதாரம், பொருளாதார வீழ்ச்சியை உயர்த்திச் சென்றது.
யூதர் ஒருவர் சுட்டுக்கொல்லப்படும்போது..
இராணுவத் தளபாடங்களும், விமானங்களும் மற்றும் விவசாயம் என்பவற்றின் உற்பத்திகள் பலமடங்காகின. இதன்காரணமாக ஹிட்லரின் புகழ் ஜெர்மனில் ஓங்கியது. மக்கள் கடவுளுக்கு அடுத்தாக ஹிட்லரை மதித்தனர். ஹிட்லரின் சொல்லை மந்திரமாக மதித்தனர். ஒவ்வொரு வீடுகளிலும் அலுவலகங்களிலும் ஹிட்லரின் புகைப்படங்கள் தொங்கவிடப்பட்டன.
1939ம் வருடம் ஜெர்மனியப் படைகளால் அயல்நாடான போலண்ட் தாக்கப்படுகிறது. ஒரு வாரத்துக்குள் போலண்ட் ஜெர்மனியிடம் சரணடைந்தது. இதனால் தனது இராணுவ பலத்தையும் ஜேர்மனியைப் பற்றியும் பெருமைப்பட்ட ஹிட்லர் ஏனைய அயல்நாடுகளையும் தாக்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர விரும்பினார். அவரது விருப்பம் நிறைவேறியது. இருந்தும் வல்லரசாக இருந்த சோவியத்யூனியன் எனும் பிரமாண்டமான இராணுவத்திடம் ஜெர்மனிய சர்வாதிகாரம் எடுபடவில்லை.
தொடர் யுத்தம், இரானுவ தளபாடங்களும் உணவுகளும் உரிய முறையில் வழங்கப்படாமை, கடுமையான குளிர், என்பற்றின் காரணமாக சோவியத் யூனியனைத் தாக்கி, அங்கும் ஜெர்மனிய கொடியேற்ற நினைத்த ஜெர்மன் படுதோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து சோவியத் யூனியனின் இராணுவத்தினால் ஜெர்மன் தாக்கப்படுகிறது. பெர்லின் நகரில் சோவியத் கொடி பறக்கவிடப்படுகிறது. பெர்லினை சோவியத் படையினர் சுற்றிவளைத்து தாக்குதல் நடாத்தப்படுவதை அறிந்த ஹிட்லரும், அவர் நெடுங்காலமாக நேசித்து பின்னர் திருமணம் முடித்த தனது அன்பு மனைவி ‘ஈவா பிரவ்ண்’ உம் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
சோவியத் படையினர் பேர்லினைக் கைப்பற்றி சோவியத் கொடியை நடும்போது..
எல்லாவற்றுக்கும் மூக்கை நுழைக்கும் அமெரிக்காவுக்கு, ஜேர்மனியில் காலடி எடுத்து வைக்க பயமாக இருந்தது. கடல் மார்க்கமாகவும், ஆகாயமார்க்கமாகவும் சில குண்டுகளை வீசிவிட்டு தப்பிவிடும் தந்திரங்களையே அன்று அமெரிக்கா செய்தது. அமெரிக்காவை ஜப்பான் தனித்து எதிர்த்து நின்றதால் அமெரிக்காவுக்கு ஜப்பான் சவாலாக இருந்தது. இதனால், தனது கவனத்தை ஜப்பான் மீதும், ஜப்பானிடமிருந்து அமெரிக்காவைக் காப்பாற்றும் செயல்களிலும் அமெரிக்கா ஈடுபட்டுக்கொண்டிருந்தது.
இதனால் ஜேர்மனைத் தோற்கடிக்க அமெரிக்காவால் முடியவில்லை. பலம் பொருந்திய பிரமாண்டமான சோவியத் யூனியன் துருப்புக்களின் திடகாத்திரமான ஊடுறுவலே அசைக்க முடியாத ஜேர்மனியை வீழ்த்த சோவியத் துருப்புக்களுக்கு முடிந்தது.
‘ஹிட்லர் பங்கர்’ எனப்படும் ஜெர்மனிய உயர் தலைவர்களும் படைத்தளபதிகளும் மறைவாக இருந்து வந்த பதுங்குக் குழியின் தனது அறையில் இந்த தற்கொலை இடம் பெற்றது. எப்பொழும் தன்னுடன் வைத்துக்கொள்ளும் கைத்துப்பாக்கியால் தனது விசேட அறையில் தன்னைத்தானே சுட்டுக்கொள்கிறார் ஹிட்லர். அவரது மனைவி நஞ்சறுந்தி உயிரிழந்ததாக செய்திகள் தெரிவித்திருந்தன. ஹிட்லரின் பூட்டப்பட்ட அறைக்கதவை உடைத்து சடலத்தை வெளியில் எடுத்து நாஸிப்படையினர் எரித்துவிட்டு, பின்வாங்கினர்.
1945 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 30ம் திகதி ஹிட்லரின் மறைவுடன் ஜேர்மன் வீழ்ந்தது.  எரிந்த நிலையில் காணப்பட்ட இருவரது உடல்களையும் சோவியத் யூனியனின் ‘ரெட் ஆமி’  (Red Army) எனப்படும் படையினர் கண்டு பிடித்து உறுதிப்படுத்தினர். 1945  ஏப்ரலில் சோவியத் யூனியன் ஜேர்மனைக் கைப்பற்றும் வரை 21 மில்லியன் ஜேர்மன் படையினர் இரண்டாம் உலக மகா யுத்தத்தில் கொல்லப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
CORPSE1[1]
தற்கொலை செய்யப்பட்ட ஹிட்லரின் சடலம்
ஹிட்லரின் படைகள் 7 மில்லியன் மக்களைக் கொன்று குவித்தனர். இவற்றுள் அதிகமானோர் யூதர்கள். சோவியத் துருப்புக்கள் பெர்லினைக் கைப்பற்றியதும், ஜேர்மனிக்காக குரல்கொடுத்து வந்த அச்சு ஊடகங்களும் வானொலிகளும் முடக்கப்பட்டன. ஊடகவியலாளர்கள் உயிரைக்கைப்பற்றிக்கொள்ள திணறி ஓடினர்.
hitler-and-eva-600x330[1]
தனது அன்பு மனைவியுடன்
இதே போல் உலகமெங்கிலும் இருந்து ஜேர்மனுக்காக ஒளிவு மறைவில் குரல் கொடுத்தவர்கள், ஊடகவியலாளர்கள் எல்லோரும் ஹிட்லரின் மரணத்தையடுத்து எழுதுவதை நிறுத்திவிட்டனர். அமெரிக்காவினதும், அமெரிக்காவுடன் ஒன்றிணைந்து போராடிய நாடுகளினதும் மேலோங்கள்களால் இதுவரைக்கும் ஹிட்லரும், ஹிட்லரின் படைகளும் கொன்று குவித்த மக்களின் எண்ணிக்கையே உலகமெங்கிலும் பரப்பப்பட்டிருகிறதே தவிர, அமெரிக்காவும் அதற்கு ஆதரவான நாடுகளும் எத்தனை மில்லியன் மக்களைக் கொன்றுகுவித்தன என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. காரணம் நாம் மேற்சொன்ன காரணங்களால் அச்சு ஊடகங்கள் அன்று முடக்கப்பட்டிருந்தன.
hitler-dead-hf[1]
ஹிட்லரின் மரணத்தை உறுதிப்படுத்திய அப்போதைய அச்சு ஊடகங்களுள் ஒன்று (May 02, 1945)
 

 

No comments:

Post a Comment