Saturday, April 19, 2014

2009ம் ஆண்டு புலி பயங்கரவாதத்தை அடக்கிய எமது அனுபவம் ஏனைய நாடுகளுக்கு முன்மாதிரியாக இருக்கும்: கோட்டாபய ராஜபக்ஷ!

Saturday, April 19, 2014
இலங்கை::2009ம் ஆண்டு மே மாதம் வரையில் இலங்கை அரசா ங்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த, மிகப் பெரிய பயங்கரவாத இயக்கமான புலிகளை நாம் யுத்த முனையில் மண்டியிடச் செய்ததன் மூலம் முழு உலக நாடுகளுக்கும் எவ்விதம் பயங்கரவாத இயக்கங்களை துவம் சம் செய்ய முடியும் என்பதை கற்றுக் கொடுத்தோம் என பாது காப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் நடைபெற்ற 14வது ஆசிய பாதுகாப்பு சேவைகள் மகாநாடு மற்றும் கண்காட்சியின் ஒரு அங்கமாக இடம்பெற்ற 2014 புத்த ஜாயா பேரவையில் உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர், புலிகள் இயக்கம் நாட்டில் இன ரீதியிலான இனத்து வேசங்களை வெளிநாடுகளில் புலம் பெயர்ந்துள்ள மக்கள் மத் தியில் பரப்பியதன் மூலம் தங்களது ஆயுதப் போராட்டத்துக்கு அரசியல் ஆதரவையும், பெருமளவு நிதி உதவியையும் வெளி நாடுகளில் இருந்து பெற்றுக் கொள்ளும் தந்திரோபாயத்தை கைப்பற்றி வந்தது என்று சுட்டிக் காட்டினார்.

புலம் பெயர்ந்த புலிகள் ஆதரவு தமிழர்கள் மத்தியில் உள்ள தீவிரவாதப் போக்கு டையவர்களின் ஆதரவுடன் சுமார் 30 நாடுகளில் எல்.ரி.ரி.ஈ தன் கிளைகளை அமைத்து நிதி உதவியையும், அரசியல் ஆதரவையும் திரட்டி வந்தது என்றும் அவர் கூறினார்.

1993 முதல் 2002ம் ஆண்டு வரையில் எல்.ரி.ரி.ஈ உலகளாவிய ரீதி யில் வருடாந்தம் 50 மில்லியன் அமெரிக்க டொலர் முதல் 75 மில்லியன் அமெரிக்க டொலர் வரையில் திரட்டியது என்றும் 2002 முதல் 2008 வரையில் இவ்வியக்கம் வருடாந்தம் 200 மில்லியன் அமெரிக்க டொலரைப் பெற்றுக் கொண்டது என் றும் தெரிவித்தார்.

திட்டமிட்ட பிரசாரங்களின் மூலமும் மனிதர்களிடம் இருந்து பல வந்தமாக பணத்தை அபகரிப்பதன் மூலமும் பல்வேறு வங்கி மோசடிகள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் மக்களை சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லுதல் போன்ற செயற்பாடுகளின் மூலம் கோடானு கோடி டொலர்களை சம்பாதித்ததாகவும் திரு. கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

இலங்கையில் இருந்து மனிதர்களை பணத்துக்காக கடத்தி செல் வதை தடுப்பதற்காக அரசாங்கம் 2009 முதல் 2013 வரையில் எடுத்த தீவிர கண்காணிப்பின் மூலம் இலங்கை கடற்படையி னர் இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வெளியேற எத்த ணித்த 4,273 பேரை கைது செய்து மீண்டும் நாட்டுக்கு திரு ம்பி அழைத்து வந்ததாகக் கூறினார்.

ஆசிய நாடுகளின் புலனாய்வுத் துறையினர் மத்தியில் கூடுதலான ஒத் துழைப்பும் பரஸ்பர இரகசியத் தகவல்களை பரிமாறிக் கொள் ளும் இரகசியத் தன்மையும் அதிகரிக்க வேண்டும் என்றும் அதன்மூலம் ஆசிய நாடுகளில் சர்வதேச பயங்கரவாதம் தலை தூக்குவதை கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க முடியும் என் றும் அவர் கூறினார்.

மக்களை வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக கடத்திச் சென்று கொள்ளை இலாபம் திரட்டுவோரின் கொட்டத்தை அடக்குவத ற்காக இலங்கையும் அவுஸ்திரேலியாவும் ஒன்றிணைந்து எடு த்து வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் இப்போது நல்ல வெற்றி அடைந்து வருவதாகவும் இதன் மூலம் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் இருந்து அவுஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு சட்ட விரோதமாக செல்வதற்கு மேற் கொள்ளப்படும் முயற்சிகள் ஓரளவு கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இலங்கை, இந்தியா, மாலைத்தீவு குடியரசு ஆகிய நாடுகளுக்கான கடல் எல்லை பாதுகாப்புக்கு ஒத்துழைப்பு வழங்குவது குறித் தும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் சர்வதேச கடலில் கடற்கொள்ளைக் காரர்களின் செயற்பாடுகளை முறிய டிப்பதற்கு இந்த ஒத்துழைப்பு பேருதவியாக அமையும் என் றும் பாதுகாப்பு செயலாளர் சுட்டிக் காட்டினார்.

ஆபிரிக்க கண்டத்தை அடுத்துள்ள ஆழ்கடலில் சரக்குக் கப்பல்க ளையும் உல்லாசப் பயணிகளை ஏற்றிச் செல்லும் கப்பல்களை யும் ஆக்கிரமித்து அவற்றில் பயணிப்போரிடம் இருந்து பணத் தையும், விலை உயர்ந்த பொருட்களையும் கொள்ளை அடிப்ப துடன் ஒரு சிலரை பணயக் கைதிகளாக கடத்திச் சென்று பணம் சம்பாதிக்கும் குற்றச் செயல்களும் கடற்கொள்ளைக்கா ரர்களால் இப்போது அதிகமாக இடம் பெற்று வருகின்றது.
நிலத்தில் மட்டுமல்ல ஆழ்கடலிலும் மக்களுக்கு பாதுகாப்பு அளி ப்பதற்கு ஒவ்வொரு தேசத்தினதும் கடற்படையினரும் மனம் உவந்து செயற்படுவது அவசியம் என்றும் அதன் மூலம் பயங் கரவாதிகளை அடக்கியது போன்று கடற் கொள்ளைக் காரர்க ளையும் அடக்கிவிட முடியும் என்றும் பாதுகாப்பு செயலாளர் தமது உரையில் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment