Thursday, April 10, 2014

புலிகளின் 16 தமிழ் அமைப்புக்கள் மீதான தடைக்கு ஐ.நா. சபை நிறைவேற்றிய யோசனையே காரணம்: பாலித கோஹன!

Thursday, April 10, 2014
இலங்கை::பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையிலேயே வெளிநாடுகளில் உள்ள 16 பிரிவினைவாதத்துக்கு உதவும் அமைப்புக்கள் இலங்கையில் தடை செய்யப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா.வின் வதிவிடப் பிரதிநிதி பாலித கோஹன இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
 
இலங்கையின் அரச பத்திரிகைக்கு தகவலளித்துள்ள அவர், அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர், ஐ.நா. சபை நிறைவேற்றிய யோசனையின் அடிப்படையிலேயே இந்த தடை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
 
இந்த தடையின்கீழ், மேற்கத்திய நாடுகளில் திறந்த நிலையில் செயற்படும் குறித்த அமைப்புக்கள், இலங்கையுடன் மறைமுகமாக தொடர்புகளை கொண்டிருப்பதும் தடுக்கப்படுமென்று கோஹன தெரிவித்துள்ளார்.
 
இந்த நடவடிக்கைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளமை குறித்து கருத்து வெளியிட்டுள்ள கோஹன, ஒரு பிரிவினரின் கருத்துக்களுக்காக நாட்டின் எதிர்காலத்தை விட்டுக் கொடுக்க முடியாது என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment