Saturday, April 12, 2014
இலங்கை::யாழ். மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலத்தில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 168 பேரை கைது செய்து நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தியுள்ளதாக யாழ்ப்பாணம் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேனா தெரிவித்துள்ளார்.
இலங்கை::யாழ். மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலத்தில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 168 பேரை கைது செய்து நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தியுள்ளதாக யாழ்ப்பாணம் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேனா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் வாராந்தம் இடம் பெறும் ஊடகவியலாளர் சந்திப்பு யாழ். பொலிஸ் நிலையத்தில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேனா தலைமையில் பகல் இடம்பெற்றது.
நேற்று நடை பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில் 92 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். பாலியல் துஷ்பிரயோகம் சம்பந்தமாக ஒருவர், வீட்டினுள் அத்துமீறி பிரவேசித்தது சம்பந்தமாக ஒருவர், அத்து நட்டம் ஏற்படுத்தியது 02 பேர், சந்தேகத்தின் பெயரில் 04 பேர், திருட்டுத்தனமாக மின் இனைப்ப பெற்றது தொடர்பில் 04 பேர், மோசடி சம்பந்தமாக 04 பேர்,
கு
டிபோதையில் வாகனம் செலுத்தியது 05 பேர், பிடியானை பிறப்பிக்கப்பட்ட 05 பேர், வீதி விபத்து ஏற்படுத்தியது 05 பேர், குடித்துவிட்டு கலகம் விளைவித்தது 08 பேர், களவு சம்பந்தமாக 09 பேர், சட்டவிரோதமான மது விற்பனையில் ஈடபட்டது 13 பேர், அடித்து காயப்படுத்தியது. 31 பேருமாக 92 பேரும்,
காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில் பாரிய குற்றம் சம்பந்தமாக 03 பேரும், அனுமதிப்பத்திரம் இன்றி மது விற்பனை செய்த 02 பேரும், பிடியானை பிறப்பிக்கப்பட்ட 09 பேரும், சந்தேகத்தின்பெயரில் 09 பேரும், குடிபோதையில் வாகனம் செலுத்திய ஒருவரும், ஏனைய குற்றங்கள் சம்பந்தமாக 52 பேருமாக 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment